»   »  'அரைகுறை'க்கு பாரதி ஸாரி!

'அரைகுறை'க்கு பாரதி ஸாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bharathi
இனிமேல் நான் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று ரசிகர்களின் நெஞ்சங்களில் 'இடி'யை இறக்கியுள்ளார் 'அம்முவாகிய நான்' பாரதி.

பத்மா மகன் இயக்க, பார்த்திபன் நடிக்க வெளியான படம் அம்முவாகிய நான். இந்தப் படத்தில் விபச்சாரப் பெண் கேரக்டரில் நடிக்க சினேகா உள்ளிட்ட பலரையும் அணுகினர். ஆனால் யாருமே நடிக்க முன்வரவில்லை. இமேஜ் போய் விடும் என்ற பயம்தான் காரணம்.

அந்த நேரத்தில் துணிந்து நடிக்க வந்தவர் பாரதி. காலை நேரத்து சூரியன் போல படு பிரகாசமான முகத்துடன் கூடிய பாரதிக்கு அம்முவாகிய நான் பெரும் பிரேக் கொடுத்தது.

படம் முழுக்க அவர் நடிப்பில் அசத்தியிலிருந்தாலும் அதையும் மீறி பேசப்பட்டது அவரது அழகான கிளாமர்தான். இதனாலோ என்னவோ அவரைத் தேடி கிளாமர் கலந்த கதாபாத்திரங்கள்தான் தேடி வருகிறதாம்.

தற்போது நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தில் அகத்தியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் பாரதி. அதுதவிர தக்காளி சீனிவாசன் நீண்ட காலத்திற்குப் பிறகு இயக்கும் திரில்லர் படமான சற்று முன் கிடைத்த தகவல் படத்திலும் பாரதி திறமை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இனிமேல் கிளாமர் அதிகம் காட்டி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாரதி. அம்முவாகிய நான் படத்தில் மட்டும் கிளாமர் காட்டினீர்களே என்று யாராவது கேட்டால், அந்த படத்தின் கதைக்கு கவர்ச்சி தேவைப் பட்டதால் கிளாமர் காட்டினேன். மற்றபடி முழு நீள கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் பாரதி.

இந்த கொள்கை முடிவு காரணமாக தன்னைத் தேடி வரும் கிளாமர் வேடங்களையெல்லாம் நிராகரித்து வருகிறாராம் பாரதி. ஹோம்லி கேரக்டர்களாக இருந்தால் கொடுங்கள் என்று அன்போடு கேட்கிறாராம்.

ஆனால் பாரதிக்கு ஹோம்லி கேரக்டர் கொடுக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் சற்றே தயக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரைத் தேடிப் போன பலர் திரும்பிப் போகாமல் இருந்து விட்டார்களாம்.

இன்னொரு கொள்கை முடிவையும் பாரதி எடுத்துள்ளார். அதாவது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடும் ஆர்வம் இல்லை, அதற்காக முயற்சிக்கவும் மாட்டேன் என்றும் கூறுகிறார் பாரதி.

நல்லா சமாளிக்கிறாரய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil