»   »  டோரா: ஜோடியில்லாமல் 'சோலோ'வாக நடிக்கும் நயன்தாரா!

டோரா: ஜோடியில்லாமல் 'சோலோ'வாக நடிக்கும் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா நடிக்கும் 'டோரா' படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

'நீ எங்கே என் அன்பே', 'மாயா' என நயன்தாராவை மையமாக வைத்து வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

No Opposite Pair in Nayanthara's Dora

'டோரா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அப்படத்தை அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்குகிறார்.விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணம் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நயன்தாராவுக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. 'மாயா', 'நீ எங்கே என் அன்பே' போல இப்படத்தில் காதல் காட்சிகளும் கிடையாதாம்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் இடங்களில் 'டோரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். குறிப்பாக டைடல் பார்க், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

'தனி ஒருவன்' புகழ் ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, பெங்களூரைச் சேர்ந்த சுலிலே குமார் வில்லனாக அறிமுகமாகிறார். ஒரு கொலை மற்றும் அதுசார்ந்த விசாரணைகளை சுற்றி நகரும் இக்கதையில் கார் ஒன்று முக்கியப் பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது.

English summary
Sources said No Love Portions in Nayanthara's Dora.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil