»   »  என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்

என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பிசியாக இருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். தற்போது விஜய்க்கு ஜோடியாக விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தி தனது திரையுலக வாழ்க்கை பற்றி கூறுகையில்,

கிளாமர்

கிளாமர்

நான் எந்த படத்திலும் கிளாமராக நடிக்க மாட்டேன். அது எனக்கு ஒத்தும் வராது. தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். அங்கும் யாரும் என்னை கிளாமராக நடிக்குமாறு வற்புறுத்தவில்லை.

நிதானம்

நிதானம்

வந்த வேகத்தில் அதிக படங்கள் ஒத்துக்கிட்டு நடிக்க விரும்பவில்லை. எதையும் நிதானமாக செய்ய விரும்புகிறேன். எதிலும் அவசரப்படக் கூடாது என்று நினைப்பவள் நான்.

சம்பளம்

சம்பளம்

நான் தற்போது அதிக சம்பளம் கேட்கவில்லை. எனக்கு என கிராக்கி அதிகமானால் சம்பளத்தை உயர்த்துவது பற்றி பார்க்கலாம். நான் அதிக சம்பளம் கேட்பதாக கூறுவதில் உண்மை இல்லை.

காதல்

காதல்

என் வாழ்வில் இதுவரை காதல் வரவில்லை. காதல் வந்தாலும் அதற்கு எங்கள் வீட்டில் எந்தவித பிரச்சனையும் வராது என்று நம்பிக்கை உள்ளது. ஏன் என்றால் என் பெற்றோரே காதல் திருமணம் செய்தவர்கள் தான்.

English summary
Keerthy Suresh said that there won't be any issue if she falls in love with some one in future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil