»   »  நெறையா எதிர்பார்த்தேன், கோலிவுட்டில் யாருமே கண்டுக்கவில்லை: ஒரு நடிகையின் கவலை

நெறையா எதிர்பார்த்தேன், கோலிவுட்டில் யாருமே கண்டுக்கவில்லை: ஒரு நடிகையின் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை கோலிவுட்டில் யாருமே கண்டுகொள்ளவில்லை என நடிகை இஷா தல்வார் கவலை தெரிவித்துள்ளார்.

சிவா நடித்த தில்லு முல்லு ரீமேக் படம் மூலம் கோலிவுட் வந்தவர் மும்பையை சேர்ந்த இஷா தல்வார். அவரது தந்தை பாலிவுட் இயக்குனர் ஆவார். 3 ஆண்டுகள் கழித்து இஷா மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

கோலிவுட்

கோலிவுட்

தில்லு முல்லு படம் ரீமேக்கிற்கு பிறகு கோலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை உள்ளது.

சம்பளம்

சம்பளம்

நான் அதிக சம்பளம் கேட்பதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். நான் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. எனது கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறேன்.

தமிழ்

தமிழ்

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் எனக்கு வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். தமிழ் படங்களில் நடிக்க வசதியாக தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

கிசுகிசு

கிசுகிசு

என்னை பற்றி ஒரு கிசுகிசுவும் வரவில்லையே என்று நான் நினைத்தது உண்டு. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதனால் கிசுகிசு வரவில்லை. கிசுகிசு வராமல் இருப்பதும் நல்லது தானே.

English summary
Actress Isha Talwar said that no one from Kollywood noticed her after Thillu Mullu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil