»   »  கமலை பிரிவதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை: கவுதமி

கமலை பிரிவதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை: கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பிறகு நடிகை கவுதமி கமல் ஹாஸனை பிரிவதை தன்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த கமல் ஹாஸன், கவுதமி நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்து வாழ்ந்தனர். கமல் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுதமியுடன் வாழ்ந்தார்.

இருவரும் திருமணம் செய்யாமல் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

பிரிவு

பிரிவு

13 ஆண்டு கால உறவை இன்றுடன் முறித்துக் கொள்வதாக நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். தான் முதலில் ஒரு தாய் அதன் பிறகே மற்ற உறவுகள் என அவர் தெரிவித்துள்ளார்.

கஷ்டம்

கஷ்டம்

கமல் ஹாஸனை பிரிவது மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என கவுதமி பிரபல செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் இந்த பிரிவை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்த தொலைக்காட்சி கேட்டதற்கு கவுதமி கூறுகையில், பிரிவை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமலை பிரிந்ததற்கான காரணத்தை கூற விரும்பவில்லை என்றார்.

ஸ்ருதி

ஸ்ருதி

கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஆகியோர் அருமையாக வளர்ந்துவிட்டனர். அவர்கள் இருவருக்கும் நல்ல தோழியாக இருக்க விரும்பினேன் என கவுதமி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Gauthami said that she is not able to bear the break up with Kamal Haasan after living with him for 13 long years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil