அனுஷ்கா இல்லையாம்.. தீபிகா படுகோனுக்கு பதிலாக இந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நாக் அஸ்வின்!

சென்னை: பிரபாஸின் கல்கி படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அனுஷ்கா நல்ல தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் ஏஐ எடிட் எல்லாம் போட்டனர். மேலும், ஏற்கனவே புஜ்ஜி காருக்கு குரல் கொடுத்த கீர்த்தி சுரேஷ் கூட ட்ரை பண்ணலாம் என்றனர். ஆனால், தற்போது இன்னொரு பிரபல நடிகையிடம் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் படத்தில் முன்னதாக அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிக நேரம் வேலை வாங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகிய நிலையில், தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் கல்கி 2ம் பாகம் படத்தில் இருந்தும் தீபிகா படுகோனை அதிரடியாக படக்குழு நீக்கியது.

Not Anushka Shetty Sai Pallavi in talks for to replace Deepika Padukone in Kalki 2
Photo Credit:

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. பிரபாஸ் திட்டமிட்டே தீபிகா படுகோனை துரத்தியடித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், சுமதி கதாபாத்திரத்துக்காக தீபிகா படுகோனை அப்படி நடிக்க வைத்த நாக் அஸ்வின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமதியாக சாய் பல்லவி: கல்கியை சுமக்கும் சுமதியாக தீபிகா படுகோன் அசத்தலான நடிப்பை வெளியிட்டு இருந்தார். அதிலும் அவர் அந்த அக்னி சீனில் ஆடைகள் எல்லாம் எரிந்து சாம்பலாக அப்படியே ஆடைகளின்றி நடந்து வரும் காட்சியெல்லாம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்நிலையில், அதே போன்ற பொறுமையான முகத்தோற்றத்துடன் இருக்கும் நடிகையாக இருக்க வேண்டும் என நினைத்த நாக் அஸ்வின் தற்போது சுமதியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமாயணா: ஏற்கனவே பாலிவுட் ரசிகர்களையும் சாய் பல்லவி ராமாயணா படத்தின் மூலம் கவர்ந்துவிடுவார் என்பதால், அனுஷ்காவை விட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி சரியான சாய்ஸாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல் தான் மெயின் வில்லன்: இந்த பாகத்திலும் கமல்ஹாசன் தான் மெயின் வில்லன் என்பதால் அவருக்கு நிறைய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியொரு சயின்ட்டிஸ்ட் உலகை அழிக்கும் வில்லனாக மாறுகிறார் என்கிற அளவில் அவரது கதாபாத்திரம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X