»   »  கபாலி... மகிழ்ச்சியாக “மன்னிப்பு” கேட்ட 'குமுத வள்ளி'!

கபாலி... மகிழ்ச்சியாக “மன்னிப்பு” கேட்ட 'குமுத வள்ளி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பட புரோமோஷன்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, பட வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் மலேசிய டான் ஆக ரஜினி நடித்துள்ள படம் கபாலி. தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வரும் இப்படம் வசூல் சாதனையும் புரிந்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே...

ராதிகா ஆப்தே...

கபாலியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வயதான மற்றும் இளமையான தோற்றங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருந்தார் ராதிகா ஆப்தே.

புரோமோஷன் வேலைகள்...

புரோமோஷன் வேலைகள்...

ஆனபோதும் கபாலி பட புரோமோஷன் வேலைகள் ஆகட்டும், பட வெற்றி விழா ஆகட்டும் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஒருமுறை பத்திரிகையாளர்களை ராதிகா ஆப்தே சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அதுவும் நடக்காமலேயே போனது.

மன்னிப்பு...

மன்னிப்பு...

இந்நிலையில், ‘கபாலி' புரோமோஷன்களில் பங்கேற்க முடியாதது குறித்து அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் நடித்துவரும் ‘கோல்' என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் ‘கபாலி' படத்தின் புரோமோஷன்களில் என்னால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக மீடியாக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

‘கபாலி' படம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. ரஜினி சாருடன் இணைந்து நடித்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது.

அடுத்த படம்...

அடுத்த படம்...

அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘கோல்' படம் முடிந்த கையோடு, நடிப்புக்கு சிறிய இடைவெளி கொடுக்கப்போகிறேன். அதன்பிறகு அடுத்த படம் குறித்து முடிவு செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ரத்த சரித்திரம்...

ரத்த சரித்திரம்...

ராதிகா ஆப்தே ஏற்கனவே தமிழில் டோனி, ரத்த சரித்திரம், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Radhika Apte, who played megastar Rajinikanth’s wife in the record-breaking film “Kabali”, apologised to the media for not being part of the promotions, something she termed “unfortunate” as she was shooting for another film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil