»   »  வசூல் செய்யாமல் விருது வாங்கும் படத்தில் நடித்து என்ன பயன்?: தமன்னா

வசூல் செய்யாமல் விருது வாங்கும் படத்தில் நடித்து என்ன பயன்?: தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வசூல் செய்யாமல் தோல்வி அடைந்து விருது வாங்கும் படங்களில் நடித்து ஒரு பலனும் இல்லை என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தர்மதுரை, தேவி என தனது படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா. பாகுபலி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டாம் பாகத்திலும் தனது கதாபாத்திரம் வலுவானதாக அமைந்துள்ளது என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார்.

விருதுகள்

விருதுகள்

நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். விருதுகள் மீதும் சரி, விருது படங்கள் மீதும் சரி ஆசை இல்லை. வசூல் செய்யாமல் தோல்வி அடைந்து வெறும் விருது வாங்கும் படத்தில் நடித்து என்ன பயன்.

வசூல்

வசூல்

படங்கள் நல்ல வசூல் செய்தால் அது தான் விருதுக்கு சமம். நான் நடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும், படம் நல்ல வசூல் செய்ய வேண்டும் என்று நினைத்தே ஒவ்வொரு படங்களிலும் நடிக்கிறேன்.

பாகுபாலி 2

பாகுபாலி 2

என் நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து படங்களிலும் என் கதாபாத்திரங்கள் நல்லதாக அமைந்திருந்தன. பாகுபலி 2 படத்திலும் நன்றாக நடித்துள்ளேன். இந்தியில் எனக்கு மவுசு இல்லை என்பது தவறு.

படங்கள்

படங்கள்

நான் நடித்த பாகுபலி இந்தியில் புதிய வசூல் சாதனை செய்தது. நான் நடிக்கும் படங்கள் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகின்றன. அதனால் தான் நான் அடிக்கடி படத்தில் நடிக்காமல் இடைவெளி விடுவது போன்று தெரிகிறது.

English summary
Actress Tamanna said that there is no use in acting in movies that fail in the box office and get awards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil