»   »  நச்சு நச்சுன்னு இச்சு கொடுப்பதில் தப்பு இல்லீங்க: "தில்லு முல்லு" நாயகி!

நச்சு நச்சுன்னு இச்சு கொடுப்பதில் தப்பு இல்லீங்க: "தில்லு முல்லு" நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. அதனால் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகை இஷா தல்வார் தெரிவித்துள்ளார்.

சிவா நடித்த தில்லுமுல்லு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மும்பையை சேர்ந்த இஷா தல்வார். அதன் பிறகு அவரை தமிழ் படங்கள் பக்கமே காணவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து இஷா மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் நடித்துள்ள மீண்டும் ஒரு காதல் கதை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து இஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காதல்

காதல்

படத்தில் மட்டும் தான் காதலிக்கிறேன். நிஜத்தில் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை. என்னை யாருடனும் சேர்த்து இதுவரை கிசுகிசுவும் வந்தது இல்லை.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

முத்தம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகும். அப்படி இருக்கும்போது முத்தக்காட்சியில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை. படத்திற்கு தேவை என்றால் நிச்சயம் முத்தக் காட்சியில் நடிப்பேன்.

இடைவெளி ஏன்?

இடைவெளி ஏன்?

மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்ததால் தமிழில் இடைவெளி விழுந்துவிட்டது. இனி தமிழ் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

சோகம்

சோகம்

நடிப்பது தான் என் தொழில். அப்படி இருக்கையில் அனைத்து வகை காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் எல்லா காட்சிகளுமே நடிப்பு தான். இதில் சிரமமான காட்சி, எளிதான காட்சி என்றெல்லாம் இல்லை.

English summary
Actress Isha Talwar said that as kiss is part of life, there is nothing wrong in acting in kissing scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil