»   »  திருமணத்திற்கு முன்பு செக்ஸில் தவறு இல்லை: நடிகை 'தில்' பேட்டி

திருமணத்திற்கு முன்பு செக்ஸில் தவறு இல்லை: நடிகை 'தில்' பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என பாலிவுட் நடிகை தனிஷா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையும், நடிகையுமானவர் தனிஷா முகர்ஜி. அவர் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். வினய், சதா நடித்த உன்னாலே உன்னாலே படத்திலும் தனிஷா நடித்துள்ளார். நடிகர் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் நடிகர் அர்மான் கோஹ்லியுடன் அடித்த லூட்டி பிரபலம் ஆனது.

இந்நிலையில் தனிஷா ட்விட்டரில் ரசிகர்களிடம் சாட் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

முன்னாள் காதலர்கள்

முன்னாள் காதலர்கள்

தனிஷா பாலிவுட் நடிகர்கள் உதய் சோப்ரா, அர்மான் கோஹ்லி ஆகியோரை காதலித்தார். தற்போது அவர்கள் பற்றி ரசிகர்கள் கேட்டதற்கு தனிஷா கூறுகையில், முன்னாள் காதலர்கள் நண்பர்கள் ஆக முடியாது. நான் அர்மான் கோஹ்லியுடன் சேர்ந்து படத்தில் நடிக்க உள்ளதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார்.

காதல்

காதல்

காதல் என்பது புரிதல், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளுதல், கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு இருத்தல் என்று தனிஷா தெரிவித்துள்ளார். அவர் வாழ்வில் இரண்டு முறை காதல் வந்து சென்றுவிட்டது.

செக்ஸ்

செக்ஸ்

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வது பற்றி ரசிகர் ஒருவர் தனிஷாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், அது தனி நபரின் விருப்பம் என்று நினைக்கிறேன். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் தனிஷாவுக்கு ஆலியா பட்டின் காதலரான சித்தார்த் மல்ஹோத்ராவை தான் பிடிக்குமாம். அவர் உயரமாக இருப்பதுடன் பார்க்க அழகாக உள்ளாராம்.

பிரதமர்

பிரதமர்

ஒரு நாள் பிரதமர் ஆனால் என்ன செய்வீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு தனிஷா கூறுகையில், நான் நாட்டை சுத்தம் செய்வதுடன் நிறைய மரக்கன்றுகள் நடுவேன் என்றார் தனிஷா.

English summary
Bollywood actress Tanisha Mukerji told that there is nothing wrong with pre-marital sex.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil