»   »  நவம்பர் 26 ம் தேதி... திருமதி ராகுல் ஆகிறார் அசின்

நவம்பர் 26 ம் தேதி... திருமதி ராகுல் ஆகிறார் அசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நவம்பர் 26 ம் தேதியில் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை மணந்து திருமதியாகிறார் நடிகை அசின். திருமணம் டெல்லியிலும், ரிசப்ஷன் மும்பையிலும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மலையாள உலகைச் சேர்ந்த அசின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வேல், வரலாறு மற்றும் போக்கிரி படங்களின் மூலம் தமிழிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

தமிழில் மாபெரும் ஹிட்டான கஜினியின் மூலம் ஹிந்திக்குச் சென்ற அசினுக்கு, ஹிந்தி கஜினியும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இதனால் அசினின் பார்வை பாலிவுட்டின் பக்கம் திரும்பியது.

அசின்

அசின்

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அசின். உள்ளம் கேட்குமே படத்திற்கு முன்பே ஜெயம் ரவியுடன் அசின் நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி வெளியாகி வெற்றிப் படமாக மாறியது. தொடர்ந்து வேல், வரலாறு, போக்கிரி, கஜினி, தசாவதாரம் மற்றும் சிவகாசி போன்ற படங்களின் மூலம் தமிழின் வெற்றி நாயகியாக மாறினார்.

ஹிந்திப் பிரவேசம்

ஹிந்திப் பிரவேசம்

தமிழில் வெற்றிபெற்ற கஜினி ஹிந்திக்குச் சென்றபோது தமிழில் செய்த கல்பனா வேடத்தை ஹிந்தியிலும் ஏற்று நடித்தார் அசின். ஹிந்தியிலும் கஜினி வெற்றி பெற்றதால் பாலிவுட்டின் பக்கம் அசினின் பார்வை திரும்பியது. ஆனால் கஜினி தவிர அசின் ஹிந்தியில் நடித்த வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

காதல்

காதல்

இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மாவிற்கும், அசினிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தங்களது காதலை மறைக்காமல் ஊடகங்கள் முன்னிலையில் ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து இவர்கள் இருவரின் திருமண ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

திருமணத்தேதி

திருமணத்தேதி

நவம்பர் 26 ம் தேதி அசின் - ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் உள்ள மிகப்பெரிய தனியார் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைக்க இருவரும் திட்டமிட்டு இருக்கின்றனர். நவம்பர் 27 ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு தனியார் பார்ம்ஹவுஸில் இவர்களது திருமண வரவேற்பு நடைபெறுகிறது.

மும்பையில்

மும்பையில்

நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் மும்பையில் தனது திருமண வரவேற்பை நடத்த அசின் திட்டமிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மும்பை வரவேற்பில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அசின் தனது திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Asin Marry to Rahul Sharma on November 26th in Delhi.The Wedding Reception will Take Place on November 27th at a private farmhouse at West End Greens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil