»   »  பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா!

பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா இப்போது யார் இயக்குநர், யார் ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவருக்கு கதை முக்கியம். அதுவும் தனக்கு அதிக ஸ்கோப் உள்ள கதைதான் முக்கியம்.

ஏற்கெனவே அவர் நடித்து வரும் மூன்று படங்கள், - 'அறம்', 'டோரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' - அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகள்.

Now, Nayanthara turns as Journalist

அடுத்து அவர் ஒப்புக் கொண்டுள்ள படமும் ஹீரோயின் ஓரியன்டட்தான்.

புதிய இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இந்தப் படத்தை ஈராஸ் சவுத் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மங்கோலியாவில் படமாகும் முதல் படம் இதுதான். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படத்தில் தனது உறவுகளைத் தேடி நாடு நாடாக அலையும் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் நயன்தாரா.

English summary
Actress Nayanthara's untitled project with Eros International, Direction by Bharath Krishnamachari will be floored on March 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil