»   »  அஜீத்தை 'உருக்க' பார்வதி!

அஜீத்தை 'உருக்க' பார்வதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜூ சுந்தரம் இயக்க, அஜீத் நடிக்க உருவாகவுள்ள அக்பர் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி மெல்டன் நடிக்கவுள்ளார். முன்பு நடிப்பதாக இருந்த ஷ்ரியா நீக்கப்பட்டு விட்டார்.

Click here for more images
பரட்டை என்கிற அழகசுந்தரம் மூலம் இயக்குநராகியிருக்க வேண்டியவர் டான்ஸ் புயல் ராஜூ சுந்தரம். ஆனால் அப்போது சில குழப்பங்கள் ஏற்பட்டதால் படத்திலிருந்து விலகி விட்டார் ராஜு. இப்போது விட்டதைப் பிடித்துள்ளார் - அஜீத் மூலமாக.

இயக்குநராக ராஜு சுந்தரத்தின் முதல் படமாக அக்பர் அமைகிறது. அஜீத்தான் நாயகன். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. பல்வேறு தமிழ்ப் படங்களின் வெளிநாட்டு விநியோகஸ்தரான லண்டன் கருணாஸ்தான் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.

முதலில் அக்பரின் நாயகியாக ஷ்ரியாவைப் பேசியிருந்தனர். அவரும் ஒத்துக் கொண்டு டேட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் திடீரென அவர் குண்டக்க மண்டக்க சம்பளம் கேட்டதால் கடுப்பாகிப் போன தயாரிப்பு வட்டாரம், ஷ்ரியாவை படத்திலிருந்து தூக்கி விட்டது.

இதனால் ராஜு சுந்தரமும், அஜீத்தும் சேர்ந்து பார்வதி மெல்டனை நாயகியாக தேர்வு செய்துள்ளனர். தெலுங்கு ரசிகர்களை உலுக்கிக் கொண்டிருக்கும் வசீகர சுந்தரிதான் பார்வதி மெல்டன்.

தனது கவர்ச்சி களேபரத்தால் ரசிகர்களை உருக்கி வருபவர் பார்வதி மெல்டன். கட்டுக்கடங்காத இவரது கவர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் ரொம்பவே கிளர்ச்சி அடைந்து போயுள்ளனர்.

சமீபத்தில் ஸ்ரீகாந்த்துடன் ஒரு புதிய படத்தில் பார்வதி மெல்டன் தமிழில் நடிக்க புக் ஆனார். அதுதவிர மேலும் ஒரு படமும் அவர் கைவசம் உள்ளது. இந்த நிலையில் பெரிய மீனான அஜீத் வந்து பார்வதியிடம் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே தனுஷுடன் பொல்லாதவன் படத்திலும், வினய்யுடன் உன்னாலே உன்னாலே படத்திலும் நடிக்க வந்த வாய்ப்பு பார்வதிக்கு கை தவறியது.

இதுதவிர நான் கடவுள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பும் பாலாவுக்கு திருப்தி இல்லாததால் கை நழுவிப் போனது என்பது நினைவிருக்கலாம்.

பார்வதி மெல்டன் ஒரு கலப்புக் கலக்கல் ஆவார். இவரது தந்தை ஜெர்மன்காரர். அம்மா பஞ்சாபி. 18 வயசு பருவப் புயலான பார்வதியின் கொள்ளை அழகின் ரகசியம் இப்போது புரிந்திருக்கும்.

தெலுங்கில் மட்டுமல்லாது மலையாளத்திலும் தனது அழகால் அதிர வைத்தவர் பார்வதி. தமிழுக்கும் தாவியுள்ளார். பார்வதிக்கு பரதநாட்டியம் சூப்பராக தெரியுமாம்.

ஏற்கனவே பார்வதி, ஷியாம் பெனகல் ஆங்கிலத்தில் இயக்கிய புத்தா படத்திலும் நடித்துள்ளார் என்பது கொசுறுச் செய்தி.

Read more about: parvathi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil