»   »  ஸ்ரீசாந்த் தோழி கன்னட நடிகை சஞ்சனாவிடம் போலீசார் விசாரணை?

ஸ்ரீசாந்த் தோழி கன்னட நடிகை சஞ்சனாவிடம் போலீசார் விசாரணை?

By Siva
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி திகார் சிறையில் இருக்கும் ஸ்ரீசாந்தின் தோழியும், கன்னட நடிகையுமான சஞ்சனாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஐபில் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஸ்ரீசாந்துக்கு மாடல் அழகிகள், நடிகைகள் என்று ஏகப்பட்ட தோழிகள் உள்ளனர். அந்த தோழிகளில் ஒருவருக்கு அவர் பிளாக்பெர்ரி போன் கொடுக்க அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சஞ்சனா கல்ராணி உள்பட சில கன்னட நடிகைகளிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதாக பேச்சு அடிபட்டது.

கோவாவில் முதல் சந்திப்பு

கோவாவில் முதல் சந்திப்பு

2009ம் ஆண்டில் கோவாவில் முதன்முதலாக ஸ்ரீசாந்தை சந்தித்தாராம் சஞ்சனா.

நண்பர்களாக பிரிந்தோம்

நண்பர்களாக பிரிந்தோம்

ஒரு இசை விழாவில் நானும், ஸ்ரீசாந்தும் சேர்ந்து நடனம் ஆடியதை பெரிதுபடுத்திவிட்டனர். அதனால் நாங்கள் நண்பர்களாக பிரிந்துவிட்டோம் என்றார் சஞ்சனா.

அந்த ஸ்ரீசாந்தா இது?

அந்த ஸ்ரீசாந்தா இது?

நாங்கள் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். ஸ்ரீசாந்தின் செயல் அதிரிச்சியாக உள்ளது. எனக்கு தெரிந்த ஸ்ரீசாந்த் இவர் இல்லை. இந்திய அணியில் நிலையான இடம் பெற வேண்டும் என்று தன்னை அப்போது அர்ப்பணித்துக் கொண்டார் என்று சஞ்சனா தெரிவித்தார்.

யாரும் விசாரிக்கவில்லை

யாரும் விசாரிக்கவில்லை

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரிக்கவில்லை என்றும், வேண்டுமானால் தனது செல்போனில் யார், யாருக்கு கால் சென்றுள்ளது என்பதை அவர்கள் பார்க்கட்டும் என்று தில்லாக கூறினார் சஞ்சனா.

எந்த கன்னட நடிகைக்கும் தொடர்பில்லை

எந்த கன்னட நடிகைக்கும் தொடர்பில்லை

ஐபிஎல் சூதாட்டத்திற்கும், கன்னட நடிகைகளுக்கும் தொடர்பில்லை என்று சஞ்சனா திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் அண்மையில் முடிந்த ஐபிஎல் 6வது சீசனில் ஒரு போட்டியைக் கூட நேரில் சென்று பார்க்கவில்லையாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The dark-episode of Indian Première League's spot fixing is dragging many actresses, who have been connected with Sreesanth in one or the other way, into the controversya Last week, there were rumours that a few Sandalwood actresses, who work in other South film industries, have been quizzed by Delhi cops over their connection with Sreesanth. The first name that emerged from rumour mills was none other than Sanjjanna.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more