அடுத்த 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்.. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆவேசம்!

சென்னை: விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென இனி ட்விட்டர் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என போட்டுள்ள ட்வீட்டை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

எப்போதாவது ட்வீட் போட்டு வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென இன்று பதிவிட்ட சில ட்வீட்களுக்கு கிடைத்த மோசமான ரெஸ்பான்ஸ் காரணமாக இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.

நீங்க வரலைன்னா ட்விட்டருக்கு ஒன்றும் ஆகி விடாது என பங்கமாக நெட்டிசன்கள் அவரை ஓட்டி வருகின்றனர்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்ளப் போவதாக அறிவித்தார். ரமா என்பது தனது அம்மா பெயர் என்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே மாற்றி விட்டேன், தற்போது ட்விட்டரிலும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன் என பதிவிட்டார். ஆனால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ளாமல் அவரை கலாய்க்கத் தொடங்கினர்.

ஏகப்பட்ட குழப்பம்

ஏகப்பட்ட குழப்பம்

பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர், ஷ்ரத்தா தாஸ் என ஏகப்பட்ட நடிகைகள் அந்த பெயரில் இருந்தாலும், சரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தன்னை அடையாளம் காணும் ரசிகர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தொடர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்த வண்ணம் இருந்ததால் திடீரென கடுப்பாகி விட்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ட்விட்டர் பக்கமே வரமாட்டேன்

ட்விட்டர் பக்கமே வரமாட்டேன்

சில நெட்டிசன்கள் போட்ட கிண்டல் ட்வீட்களால் கடுப்பான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆளவிடுங்கப்பா சாமி இனிமேல் ஒரு 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என ஆவேசமாக போட்ட ட்வீட்டையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அப்படியே தினமும் ட்விட்டரில் பல அப்டேட்களை கொடுத்து டிரெண்டிங்கில் இருக்கீங்க, நீங்க வரலைன்னா ட்விட்டர் நஷ்டமாகி விடும் என வச்சு செய்து வருகின்றனர்.

கிளம்புங்க காத்து வரட்டும்

கிளம்புங்க காத்து வரட்டும்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கும்பலை வெளியே அனுப்ப கமல் கொடுக்கும் ரியாக்‌ஷன் ஸ்டில்களை பதிவிட்டு கிளம்புங்க காத்து வரட்டும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ட்விட்டர் எல்லோரும் கருத்து சொல்லும் தளம், நெகட்டிவிட்டியை கண்டுக்காமல் விட்டு விடுங்க, உங்க பட வேலையை கவனியுங்க என ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். ருத்ர பிரயாக் எனும் கன்னட படத்திலும், கலியுகம் எனும் தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X