»   »  சென்னையில் ஓலா கேபால் நடிகை பார்வதிக்கு நடந்த பரிதாபம்

சென்னையில் ஓலா கேபால் நடிகை பார்வதிக்கு நடந்த பரிதாபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓலா கேபால் அலைக்கடிக்க பட்ட பார்வதி!- வீடியோ

சென்னை: நடிகை பார்வதி நாயர் ஓலா கேபுக்கு எதிராக போட்ட ட்வீட் வைரலாகிவிட்டது. அந்த ட்வீட்டை நீக்குமாறு ஓலா நிறுவனம் கெஞ்சியும் அவர் மறுத்துவிட்டார்.

நடிகை பார்வதி நாயர் சென்னை வந்தபோது ஓலா கேப் புக் செய்துள்ளார். ஓலா பிரைம் சேவை தான் சிறந்தது என்று நம்பி அதை புக் செய்துள்ளார். கேபும் வந்துள்ளது.

டிரைவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று காரை நிறுத்தியுள்ளார்.

டிரைவர்

டிரைவர்

தெரு விளக்கு கூட இல்லாத இடத்தில் காரை நிறுத்தி நான் வேறு ஒரு வாடிக்கையாளரை பிக்கப் செய்ய போகணும், நீங்கள் இறங்குங்கள் என்று டிரைவர் பார்வதியிடம் தெரிவித்துள்ளார். இது அல்ல நான் வர வேண்டிய இடம் என்று பார்வதி கூறியதை அந்த டிரைவர் கேட்காமல் அவரை கண்டமேனிக்கு திட்டியுள்ளார்.

போன்

போன்

பார்வதியோ உடனே கஸ்டமர் கேருக்கு போன் போட்டால் நீங்கள் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்று கூறியுள்ளனர். டிரைவர் வேறு திட்டிக் கொண்டே இருந்ததால் வேறு வழியில்லாமல் இரவு நேரத்தில் அந்த இருட்டான இடத்தில் இறங்கியுள்ளார் பார்வதி.

ஓலா

இரவில் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓலா கேப் நிறுவனத்திற்கு எதிராக பார்வதி ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, சென்னையில் ஓலோ ரொம்ப மோசம். இது செய்தி அல்ல. பிரைம் புக் செய்தது கூட அந்த டிரைவருக்கு தெரியவில்லை. மினி புக் செய்தேன் என்று நினைத்து பாதி வழியில் இறக்கிவிட்டார் என்றார்.

வைரல்

வைரல்

ஓலாவுக்கு எதிராக பார்வதி போட்ட ட்வீட் வைரலாகி ரசிகர்கள் அந்த கேப் நிறுவனத்தை கழுவிக் கழுவி ஊத்தினார்கள். உடனே ஓலா நிறுவனம் பார்வதியை அணுகி டிரைவரை சஸ்பெண்ட் செய்தாச்சு அந்த ட்வீட்டை நீக்குங்கள் என்று கெஞ்சியுள்ளனர். ஆனால் பார்வதி அந்த ட்வீட்டை நீக்கவில்லை.

English summary
Actress Parvati Nair tweeted that,' Ola in chenani is pathetic. It’s not News . The driver on booking prime did not even know it was a prime being booked . He thought it’s a mini n stops at a random wrong place saying that’s the location when it was no where close to it.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil