»   »  அலியா பட் என்ன பேசுனாலும் ஏன் தப்பாவே போகுது...!

அலியா பட் என்ன பேசுனாலும் ஏன் தப்பாவே போகுது...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அலியா பட் என்ன பேசினாலும் அது கேலிக்கூத்தாகி விடுகிறது அல்லது பிறரின் நக்கலுக்குள்ளாகி விடுகிறது.

அவரை வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள், கேலிகள், மீம்கள் உலா வருகின்றன. ஆனால் அதை அவர் கண்டு கொள்வதே இல்லை. ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்.

OMG! Alia Bhatt Cracks A DIRTY JOKE In Public

இந்த நிலையில் அவர் மீண்டும் கேலிக்குள்ளாகியுள்ளார். ஒரு பாடல் வெளியீட்டில் அலியா பட் கலந்து கொண்டார். அவர் நடித்துள்ள ஷாந்தார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அது.

இந்த நிகழ்ச்சியின்போது மீடியாக்காரர்களை அழைத்து உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்பதை ஓட்டாகப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு பெட்டியும் வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் ஓட்டுப் போட்டனர்.

அப்போது ஒருவர் தனது கையில் இருந்த வாக்குச் சீட்டை ஆட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அலியா, உடனே மைக்கை எடுத்து, ஹலோ, அவர் அதைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள். யாராவது போய் வாங்குங்கள் என்று கூறவே கூட்டத்தில் சிரிப்பு வெடித்தது.

அவர் சொன்னதை அங்கிருந்தவர்கள் டபுள் மீனிங்கில் எடுத்துக் கொண்டு சிரித்தனர். படத்தின் நாயகன் ஷாஹித் கபூரும் வாய் விட்டு பலமாக சிரித்து விட்டார். பின்னர் அலியாவிடமே அவர் பேசியதன் அர்த்தத்தை (அதாவது இவர்களாகப் புரிந்து கொண்ட அர்த்தத்தை) கூறி அவரைக் கிண்டலடிக்க வேறு செய்தார் ஷாஹீத் கபூர்.

ஆனால் அலியா பட் வழக்கம் போல இதையும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டார். நான் ஜோக்குக்கெல்லாம் மனம் உடைந்து போவதே இல்லை என்றும் அவர் கூலாக கூறினார்.

    English summary
    The Shaandaar actress has had jokes and memes made on her after she named Prithviraj Chauhan (the then Chief Minister of Maharashtra) as the President of India on Koffee with Karan. Yesterday when the Shaandaar actors came in front of the media to launch their latest song Raitaa Phail Gaya, she got trolled. While all the members of the media were casting a vote on which was their favourite version of the song, Alia spotted a guy waving his chit. She said, "Are vo uska hila raha hai, uska koi le lo (He is shaking his, please someone take his)." She meant to ask the volunteers to collect the guy's chit, however it came out wrong and people started laughing.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more