»   »  என்ன சேட்டையா, கேஸ் போட்டுருவேன்: பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த கத்ரீனா கைஃப்

என்ன சேட்டையா, கேஸ் போட்டுருவேன்: பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பத்திரிகையாளர்களை மீண்டும் மிரட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து பார் பார் தேகோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் பிசியாக உள்ளார்.

இது தவிர அவர் தனது முன்னாள் காதலர் ரன்பிர் கபூருடன் சேர்ந்த ஜக்கா ஜசூஸ் படத்தில் நடித்து வருகிறார்.

கத்ரீனா

கத்ரீனா

கத்ரீனா கைஃபுக்கு தனது அனுமதி இல்லாமல் புகைப்பட பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தால் சுத்தமாக பிடிக்காது. அவ்வாறு யாராவது புகைப்படம் எடுத்தால் கூலான கத்ரீனா ஆங்ரி பேர்டாக மாறிவிடுகிறார்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

கத்ரீனா வேர்ல்டு டூர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் ஸ்டுடியோவில் நடனப் பயிற்சி எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

புகைப்படம்

புகைப்படம்

டாக்டர் வந்து கத்ரீனாவை பரிசோதனை செய்துவிட்டு ஓய்வு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு செல்ல ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த கத்ரீனாவை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

மிரட்டல்

மிரட்டல்

பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்ததால் கத்ரீனா கோபம் அடைந்தார். காரில் ஏறியவர் கீழே இறங்கி வந்து பத்திரிகையாளர்களை பார்த்து, போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டினார். கத்ரீனா பத்திரிகையாளர்களை மிரட்டுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

English summary
Katrina Kaif prefers to stay away from the media glare and doesn't like if the paparazzi click her pictures without her permission. Recently, the actress got upset with some photojournalists and threatened them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil