»   »  ஹேர் கலருக்கு ரூ.55 லட்சம்: தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்த கத்ரீனா

ஹேர் கலருக்கு ரூ.55 லட்சம்: தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்த கத்ரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஃபித்தூர் படத்தில் கத்ரீனா கைஃபின் தலைமுடி சிவப்பு நிறத்தில் இருக்க ஹேர் கலருக்கு மட்டும் ரூ.55 லட்சம் செலவு செய்துள்ளார்களாம்.

அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள படம் ஃபித்தூர். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடித்துள்ளார்.

ஃபித்தூர் படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

ஃபித்தூர் படத்தில் கத்ரீனாவின் தலைமுடி சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமாம். இதை அவரிடம் தெரிவித்ததும் மும்பையில் தனது முடியை சிவப்பு நிறமாக்கும் நிபுணர்களை தேடியுள்ளார்.

லண்டன்

லண்டன்

மும்பையில் தனக்கு பிடித்த நிபுணர்கள் இல்லை என்று கூறி லண்டனில் இருந்து ஆள் வரவழைத்து தனது முடியை கலர் செய்துள்ளார்.

பயணம்

பயணம்

தலைமுடியை ஒரு முறை கலர் செய்ததோடு முடியவில்லை. அந்த கலர் படப்பிடிப்பு முடியும் வரை இருக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் சென்று டச் அப் செய்துள்ளார்.

காஸ்ட்லி

காஸ்ட்லி

லண்டனுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணித்து, 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் கத்ரீனா. ஒவ்வொரு முறையும் தனது மேனேஜரையும் லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் செய்த செலவால் தயாரிப்பாளர் பாக்கெட்டில் பெரிய ஓட்டை விழுந்துவிட்டதாம்.

ரூ.55 லட்சம்

ரூ.55 லட்சம்

அம்மணி படத்திற்காக தலைமுடியை சிவப்பு நிறமாக்க மட்டும் ஆன செலவு ரூ.55 லட்சம். இந்த பில்லை பார்த்ததும் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியில் கிட்டத்தட்ட ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்கிறார்கள் பாலிவுட்காரர்கள். இருக்காத பின்ன!

English summary
Shocked? So are we! But according to recent reports, Katrina Kaif's red hair in Fitoor costs Rs 55 lakhs. Not just that, even the producers of the movie were shocked to know their leading lady's hair colour's price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil