»   »  ஓமைகாட், இது உண்மையா?: நிஜமாவே நயன்தாரா ஒத்துக்கிட்டாரா?

ஓமைகாட், இது உண்மையா?: நிஜமாவே நயன்தாரா ஒத்துக்கிட்டாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோ இல்லாமல் அவரே ஹீரோவாக நடிக்கும் படங்களும் அவரை தேடி வருகின்றன.

இந்த காரணத்தால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

காமெடி

காமெடி

புதுமுக இயக்குனர் ஒருவர் சூரியை ஹீரோவாக வைத்து முழுநீள காமெடி படத்தை எடுக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்குமாறு அந்த இயக்குனர் நயன்தாராவை அணுகினாராம்.

நயன்தாரா

நயன்தாரா

புதுமுக இயக்குனர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் சூரி ஹீரோவாக இருந்தாலும் சரி அந்த படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

வியப்பு

வியப்பு

பெரிய பெரிய ஹீரோக்கள் படத்திலேயே நடிக்க முடியாது என்று கூறி வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் சூரி படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

டோரா

டோரா

நயன்தாரா நடித்துள்ள டோரா ஹாரர் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

English summary
Buzz is that Nayanthara has agreed to act in a full length comedy movie that has Soori as hero to be directed by a newcomer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil