»   »  சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா: என்ன கொடுமை சரவணா இது!

சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா: என்ன கொடுமை சரவணா இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் கதை என்ன என்பது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சிம்புவின் பரிந்துரையின் பேரில் ஒய்.ஜி. மகேந்திரன் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படத்தில் ஸ்ரேயாவும் உள்ளார். இந்நிலையில் படத்தின் கதை பற்றி தெரிய வந்துள்ளது.

சிம்பு

சிம்பு

சிம்பு தந்தையாகவும், இரட்டையர்களாகவும் நடிக்கிறாராம். இரட்டையர்களில் ஒருவர் நிழல் உலக தாதாவாம். தாதா கதாபாத்திரம் வரும் காட்சிகள் துபாயில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தந்தை சிம்பு

தந்தை சிம்பு

தந்தை சிம்புவின் வழி ஒரு வழி என்றால் அவரின் இரட்டையர் மகன்களின் வழி வேறு வழியாம். இது தான் கதையின் முக்கிய அம்சமாம். தந்தை சிம்புவுக்கு தான் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

தந்தை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா இரட்டையர் மகன்களுக்கு அம்மா. அதாவது சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரேயா. பாலிவுட்டிலும் கூட சீனியர் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் ஸ்ரேயா.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

இரட்டையர்களுக்கு யார், யார் ஜோடி என்பது இன்னும் தெரியவில்லை. கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதற்கிடையே ஹன்சிகா நடிப்பார் என்று வேறு ஒரு வதந்தி பரவி அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Simbu's AAA story has been revealed. Shreya is reportedly playing the role of Simbu's mother.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil