»   »  குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kushboo
முப்பெரும் தேவியர் சிலைகளை அவமதித்ததாக கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ பட பூஜையின்போது கலந்து கொண்ட குஷ்பு, செருப்புக் காலோடு, கால் மேல் கால் போட்டபடி முப்பெரும் தேவியர் சிலைக்கு அருகே அமர்ந்திருந்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்துக்களின் உணர்வுகளை குஷ்பு புண்படுத்தி விட்டார், கடவுள் சிலையை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்திலும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதி இந்து முன்னணி தலைவர் கண்ணன் சிவா என்பவர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட குஷ்பு மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 295, 295-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சம்பத்குமார், டிசம்பர் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil