»   »  செலிபிரிட்டி பவரை பயன்படுத்தும் சூட்சுமம் அறிந்த ஓவியா!

செலிபிரிட்டி பவரை பயன்படுத்தும் சூட்சுமம் அறிந்த ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியாவிற்கு அதன்பிறகும் தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து அவர் நடித்தவை எல்லாம் சிறு பட்ஜெட் மற்றும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் தான். தனது அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கிடைத்த வாய்ப்பையெல்லாம் ஏற்றுக்கொண்டார்.

போதிய பட வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் புகழ் :

பிக்பாஸ் புகழ் :

பிக்பாஸ் வீட்டிற்குள் தனது தனித்துத் தெரியும் நற்குணங்களால் சக போட்டியாளர்களால் அவமானப் படுத்தப்பட்டாலும்அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சமூகவலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு ரசிகர் படையே உருவானது.

மக்கள் ஆதரவு :

மக்கள் ஆதரவு :

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள வரவேற்பைப் புரிந்துகொண்டார் ஓவியா. அவர் முன்பு நடித்த படங்களை எல்லாம் இந்த நேரத்தில் வெளியிட்டு லாபம் பார்க்க நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆகவே, ஓவியாவும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

கடைத்திறப்பு விழாக்கள் :

கடைத்திறப்பு விழாக்கள் :

சாதாரணமாக கடை திறப்பு விழாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த ஓவியா, தற்போது பிரபலமான ஒரு கடையைத் திறந்து வைக்கவும், விளம்பரத்தில் நடிக்கவும் சில லட்சங்கள் வாங்கி இருக்கிறார்.

புதிய படங்களில் நடிக்க :

புதிய படங்களில் நடிக்க :

நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திக் கேட்டு வருகிறாராம்.

English summary
Oviya became the most popular after attending the 'Biggboss' program. So, now she raising her salary to act in films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil