»   »  ஓவியா வந்துட்டாய்யா, திரும்பி வந்துட்டாய்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஓவியா வந்துட்டாய்யா, திரும்பி வந்துட்டாய்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஓவியா ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த துவங்கியுள்ளார்.

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதன் மூலம் திரையுலகில் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் ஏற்கவில்லை.

ட்விட்டர்

ட்விட்டர்

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு ஓவியா ட்வீட்டியிருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை. அவரை பொது இடங்களில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஓவியா முதல்முறையாக ட்வீட்டியுள்ளார். இதை பார்த்துவிட்டு ஓவியா வந்துட்டாய்யா வந்துட்டாய்யா என்று அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.

அன்பு

உங்களின் அன்பும், அக்கறையும் பற்றி விளக்க வார்த்தையே இல்லை. ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உங்களின் அன்பால் மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஓவியா.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பிக் பாஸ் வீட்டில் தான் ஓவியாவை மறுபடியும் பார்க்க முடியவில்லை குறைந்தது ட்விட்டருக்காவது வந்துவிட்டாரே என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Oviya Army is happy as its favourite actress is back in twitter after a short break.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil