காசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா
சென்னை : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார் ஓவியா. படங்களுடன் மியூக் ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இவர் நடித்த ராஜபீமா படம் ரிலீசுக்காக தயாராகி வருகிறது.
களவாணி படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், சண்ட மாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஆரவ் உடன் காதல் என்னாச்சு
2017 ல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா, அங்கு ஆரவ் உடன் காதல், தற்கொலை முயற்சி என பரபரப்பை கிளப்பியதுடன், நிகழ்ச்சியின் டிஆர்பி.,யையும் தாறுமாறாக ஏற்றினார்.

ஓவியா ஆர்மி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட், ரசிகர்கள் எண்ணிக்கை எங்கேயோ போய் விட்டது. ஆர்மி தொடங்கும் அளவிற்கு பெருகி விட்டது ஓவியாவின் ரசிகர்களின் எண்ணிக்கை.

சர்ச்சை என்றால் ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல அதற்கு பிறகு ஒவியா நடித்த 90 எம்எல், ட்விட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் ஆகியன பரபரப்பு, சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறது.
Recommended Video

தரமான சம்பவமாக இருக்குமா
தற்போது சம்பவம் படத்தில் நடித்து வரும் ஓவியா, நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டை டவுசரில் தனது ஆண் நண்பர் மற்றம் தோழியுடன் பீச்சில் ஆட்டம் போட்ட ஃபோட்டோவை வெளியிட்டார். இதனை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்தனர்.

காசு, பணம், துட்டு
இந்நிலையில் இன்று, கை நிறைய கத்தையாக ரூ.500 நோட்டுகளை வைத்து, ஸ்டையிலாக போஸ் கொடுத்த ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார் ஓவியா. அத்துடன், இது வெறும் பேப்பர் தான். இருந்தாலும் உங்கள் தேவைக்காக இதை கொடுக்கிறீர்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
இந்த ஃபோட்டோவை ஓவியாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஃபயர், ரெட் ஹார்ட் எமோஜிக்களால் கமெண்ட் பகுதி நிரம்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











