»   »  என்ன செய்தார் சாமி .. பத்மப்பிரியா விளக்கம்

என்ன செய்தார் சாமி .. பத்மப்பிரியா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மிருகம் படத்தில் ஆபாசமான நடன அசைவுகளும், டிரஸ்ஸும் அணியச் சொன்னதால்தான் பாடல் காட்சியில் நடிக்க மறுத்தேன். ஆனால் அவை சரி செய்யப்பட்டதால் அந்தப் பாடலில் நடித்துக் கொடுத்தேன் என்று பத்மப்பிரியா புகார் கூறியுள்ளார்.

உயிர் என்ற பெரும் சர்ச்சையைக் கிளப்பிய படத்தைக் கொடுத்தவர் சாமி. அப்படத்தின் நாயகன், நாயகியை விட காமாந்தர அண்ணி வேடத்தில் நடித்திருந்த சங்கீதாவுக்கு குண்டக்க மண்டக்க பப்ளிசிட்டி கொடுத்து பரபரப்பூட்டியவர் சாமி.

இப்படியெல்லாம் படம் எடுப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கணும் என்று வடிவேலுவால் திகிடுமுகிடாக திட்டும் வாங்கியவர். இந்த நிலையில் உயிர் படத்தைத் தொடர்ந்து கொஞ்ச காலம் உயிரற்று இருந்த சாமி, இப்போது மிருகம் ஆக வெளியே வந்துள்ளார்.

பத்மப்ரியாதான் இதில் நாயகி. இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் படு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று படப்பிடிப்பின் பாதியிலேயே சாமியுடன் சண்டை போட்டு விட்டு வாக் அவுட் செய்தார் பத்மப்பிரியா.

என்ன நடந்தது, ஏன் இந்த வாக் அவுட் என்று திரையுலகமே பரபரப்பில் மூழ்கிப் போனது. செக்ஸியான டிரஸ்ஸைக் கொடுத்து நடிக்க வேண்டும் என பத்மப்பிரியாவை சாமி வற்புறுத்தியதாகவும், அதை அவர் மறுத்ததால் இருவருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நடந்தது என்ன என்று பத்மப்பிரியாவை அணுகி கேட்டபோது,

படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் செக்ஸியான டிரஸ் கொடுத்து ஆடச் சொன்னார் இயக்குநர் சாமி. அதில் எனக்கு ஆட்சேபனை இருந்தாலும் கூட அதை அணிந்து கொண்டு நடித்துக் கொடுத்தேன். படத்தின் கதையைக் கேட்ட பின்னர்தான் நான் நடிக்கவே ஒப்புக் கொண்டேன்.

பாடல் காட்சியின்போது சில முகம் சுளிக்க வைக்கும் அசைவுகளை நான் விரும்பவில்லை. அவை வேண்டாம் என்று மறுத்தேன். நான் சொன்னதும் அதை மாற்றி விட்டனர். மற்றபடி சாமிக்கும், எனக்கும், பட யூனிட்டாருக்கும் இடையே வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் பத்மப்பிரியா.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கட்டும்...

Please Wait while comments are loading...