»   »  சாமியை படுத்தும் பத்மபிரியா

சாமியை படுத்தும் பத்மபிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்மப்ரியாவிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டு வருகின்றனர் மிருகம் படமும் அதன் இயக்குனர் சாமியும்.

இயக்குனர் சாமி, உயிர் படத்தை இயக்கி பேரும் புகழும் பெற்றார். சர்ச்சைக்குரிய கதை என எதிர்ப்பு வந்தாலும், பல தரப்பினரும் இப்படிப்பட்ட கதைகளையே வரவேற்றதால் அதுவரை வெறும் சாமியாக இருந்தவர் உயிர் சாமி ஆகிவிட்டார்.

உயிர் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து பின்னி பெடலெடுத்தார் சங்கீதா. இவருக்கும் உயிர் பட்டம் கொடுக்கப்பட்டு அவரும் உயிர் சங்கீதா ஆகிவிட்டார். இவர் அடுத்து நடிக்கும் தனம் படத்திலும் மிக வித்தியாசமான (விபச்சாரப் பெண்) வேடம் தான்.

உயிரை இயக்கிய சாமி பத்மபிரியாவை வைத்து மிருகம் என்ற படத்தை எடுத்து வருகிறார். மிருகத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ள நிலையில், பத்மபிரியாவால் அது இழுத்துக் கொண்டே போகிறதாம்.

மிருகம் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஆபாசமாக நடிக்க சொன்னார் என்பதற்காக ஒரே கோபம் பத்மப்ரியாவுக்கு. சாமியிடம் கோபித்துக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டை விட்டு போய் விட்டார்.

அவரை துரத்திக் கொண்டே போய் கெஞ்சி கூத்தாடி திரும்பவும் அழைத்து வந்தால், ஷூட்டிங் ஸ்பாட் வந்தவுடன் ஒரு பேப்பரும், பேனாவும் கேட்டுள்ளார் பத்மா.

அதில், என்னைப் பற்றி தப்பான தகவல்களை வெளியில் யாரிடமும் சொல்லமாட்டேன் என எழுதி அதில் கையெழுத்துப் போட்டு கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறி பேப்பரை நீட்டியுள்ளார் பத்மா.

சாமிக்கு சாமி வராத குறைதான். இதெல்லாம் என்னோட நேரம்மா என புலம்பியபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் சாமி.

இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுத்தாராம். மறுநாள் ஷூட்டிங் ஆரம்பித்தது. எல்லோரும் பத்மபிரியாவுக்காக வெயிட் பண்ணி பண்ணி பார்த்துவிட்டு புலம்பி தள்ளிவிட்டுப் போய்விட்டார்களாம்.

இத்தனைக்கும் ஒரே ஒரு பாடல் காட்சிதான் மீதமிருக்கிறதாம். தயாரிப்பு தரப்பிலிருந்தும் சாமிக்கு கடுமையான வார்த்தைகளை வேறு கேட்க வேண்டியதாகிவிட்டதாம்.

இவரை நான் ஹீரோயினா போட்டது வேலியில் சும்மா போன ஓணான பிடிச்சு எங்கேயோ விட்ட கதையா போச்சே என யூனிட் ஆட்களிடம் புலம்பியுள்ளார் சாமி.

இம் மாதம் திரைக்கு வர வேண்டிய மிருகம் பத்மபிரியாவால் லேட்டாகி அடுத்த மாதம் ரிலீசாகும் எனத் தெரிகிறது. அதுவும் பத்மப்ரியா மனசு வச்சால்தான் எல்லாம் நடக்கும் என மிருகம் யூனிட் புலம்பித் தவிக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil