»   »  'பார் கேர்ள்' பத்மப்ரியா!

'பார் கேர்ள்' பத்மப்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கோலிவுட், மல்லுவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குத் தாவுகிறார் பத்மப்ரியா. சந்திரன் அரோரா இயக்கவுள்ள புதிய இந்திப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளாராம்.

Click here for more images

சத்தம் போடாதே படத்தைப் பார்த்து விட்டுத்தான் இந்த வாய்ப்பை சந்திரன் அரோரா கொடுத்துள்ளாராம். இந்தப் பட வாய்ப்பு குறித்து பத்மப்ரியா கூறுகையில், சத்தம் போடாதே படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு சந்திரன் அரோரா என்னை அவரது புதிய இந்திப் படத்தில் நடிக்க அழைத்தார். அதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மும்பை பாரில் வேலை பார்க்கும் பெண்ணாக இப்படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளார். பார்களில் வேலை பார்க்கும் பெண்களின் சோகம் நிறைந்த வாழ்க்கைதான் இப்படத்தின் கதை. கதை என்னை வெகுவாக கவர்ந்து விட்டதால் உடனே ஒத்துக் கொண்டேன் என்றார்.

இப்போது தமிழிலும் அவருக்குப் புதிதாக 2 படங்கள் வந்துள்ளதாம். அதுகுறித்து பத்மா கூறுகையில், தமிழிலும் இப்போது நிறைய வாய்ப்புகள் வருகின்ரன. இது என்னை சந்தோஷப்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் நான் நடித்துள்ள நாலு பெண்ணுகள் (இயக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன்) படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. இதுவும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். கனடா திரைப்பட விழாவில் இது பெரும் பாராட்டைப் பெற்ற படம் என்றார்.

அடுத்ததாக சென்னையிலேயே நிரந்தரமாக செட்டிலாக தீர்மானித்துள்ளார் பத்ம்பிரியா. இதற்காக ஒரு வீட்டை வாங்கிப் போடவும் தீர்மானித்து நல்ல வீடாக தேடிக் கொண்டிருக்கிறாராம்.

கோடம்பாக்கம் பக்கம் நல்ல வீடாக இருந்தால், பத்மப்ரியாவுக்கு பரிந்துரை செய்யுங்களேன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil