»   »  பாலிவுட் பக்கம் போன பத்மப்ரியா!

பாலிவுட் பக்கம் போன பத்மப்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த பத்மப்ரியா மீண்டும் நடிக்க வந்தார்.

திருமணத்துக்கு முன்பு பெர்ஃபார்மன்ஸ் ரோலா 'கூப்பிடு பத்மப்ரியாவை' என்று வாய்ப்புகளை வாரி வழங்கிய தமிழ் சினிமா ரீ என்ட்ரி பத்மப்ரியாவை கண்டுகொள்ளவில்லை.

Padmapriya goes to Bollywood

சில படங்களில் கேமியோ ரோல்கள் தான் கிடைத்தன. வசந்த் இயக்கத்தில் ஆரம்பித்த பெண்களை மையமாகக் கொண்ட படமும் ட்ராப் ஆகி நிற்கிறது.

எனவே வாய்ப்பில்லாமல் இருந்த பத்மப்ரியா இந்தி பக்கம் தன் கவனத்தை திருப்பினார். அங்கே அடித்திருக்கிறது யோகம்... தி ஆர்பன் என்னும் பாலிவுட் படத்தில் நஸ்ருதீன் ஷாவின் மகன் விவான் ஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் இவரோடு கமாலினி முகர்ஜி, மாளவிகா மேனன் ஆகியோர் இருந்தாலும் பத்மப்ரியாவுக்குத்தான் முக்கிய ரோலாம். படத்தை இயக்கும் ரஞ்சித் ஃபிலிட் மூன்று தேசிய விருதுகள் வென்ற இயக்குனராம்.

அப்ப பத்மப்ரியாவுக்கு செம தீனி இருக்கு!

English summary
Actress Padmapriya, who recently made her comeback after marriage is entering Bollywood with The Orphan movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil