»   »  'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்!

'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில்.
அந்தப்படத்தில் இவரது அபாரமான நடிப்பை பார்த்துத்தான் தமிழில் ரீமேக்கான 'பாபநாசம்' படத்திலும் கமல்ஹாசன் மகளாக நடித்திருந்தார்.

தெலுங்கு ரீமேக்கிலும் அந்த கேரக்டரில் எஸ்தரையே நடிக்க வைத்தார்கள். இவரது அக்காவாக மலையாளத்தில் அன்சிபா ஹாசனும், தமிழில் நிவேதா தாமஸும் நடித்திருந்தனர். 2001லேயே குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான எஸ்தர் அனில் சுமார் 20 படங்களில் நடித்துவிட்டார்.

Papanasam kamal's second daughter became heroine

இந்தநிலையில் தற்போது 17 வயதை எட்டியுள்ள எஸ்தர் அனில், சீனியர் இயக்குனரான ஷாஜி என்.காருண் இயக்கிவரும் 'ஊளு' (அவள்) என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். ராய் லக்‌ஷ்மியும், இஷா தல்வாரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்களாம்.

சிறுவயதிலேயே நடிப்பில் பின்னியெடுத்த எஸ்தர் அனில், கதாநாயகியாகவும் கலக்கினால் ரசிகர்கள் மனதில் இடம்பெறலாம். 'ஊளு' படம் அதற்கு பிள்ளையார் சுழி போடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Child actor Esther Anil is acts as Mohanlal's second daughter in the movie 'Drishyam' and acts as kamal's younger daughter in 'Papanasam'. Esther Anil, who is now 17, is the heroine in the film 'oolu' directed by Shaji N Kaarun.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil