»   »  நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல்

நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்த பார்ச்ட் படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே அதில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி வெளியானது.

அந்த காட்சி இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பார்ச்ட்

பார்ச்ட்

பார்ச்ட் படத்தில் வந்த நிர்வாண காட்சிகள் வெளியானது பற்றி எனது கருத்தை கேட்கும் கேள்வியே தவறு. உங்களை போன்றவர்கள் தான் சர்ச்சையை கிளப்புவது.

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனால் நீங்கள் தான் சர்ச்சையை கிளப்பியது. நான் அல்ல.

நடிகை

நடிகை

நான் ஒரு நடிகை. என் வேலைக்கு என்ன தேவையோ அதை செய்வேன். உலக சினிமாவை பார்த்தால், வெளிநாட்டில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் கேட்க மாட்டீர்கள்.

வெட்கப்படவில்லை

வெட்கப்படவில்லை

நான் எதை நினைத்தும் அசிங்கப்படவில்லை. தங்களின் உடலை நினைத்து வருந்துபவர்கள் தான் அடுத்தவர்கள் உடல் மீது அக்கறை கொள்வார்கள். நாளைக்கு நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதில் கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள். அதன் பிறகு இது பற்றி நாம் பேசுவோம்.

English summary
Actress Radhika Apte got angry with a media reporter for asking about the leaked nude scenes in her last release ‘Parched’.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil