»   »  புஸு புஸுன்னு இருந்த நடிகை பரினீத்தியா இது?: வியக்கும் பாலிவுட்

புஸு புஸுன்னு இருந்த நடிகை பரினீத்தியா இது?: வியக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புஸு புஸுன்னு இருந்த பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா கடந்த சில மாதங்களில் தனது உடல் எடையை பெருமளவு குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா. கேமராவுக்கு பின்னால் இருக்க நினைத்த அவர் ஒரு கட்டத்தில் நடிகை ஆனார். குச்சி, குச்சியா இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பரினீத்தி பூசினாற் போன்று இருந்தார்.

இதனாலேயே அவர் பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளானார்.

எடை குறைப்பு

புஸு புஸுன்னு இருந்த பரினீத்தி சோப்ரா கடந்த சில மாதங்களாக கடுமையாக ஒர்க்அவுட் செய்து, டயட்டில் இருந்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

அடடே

குண்டாக இருந்த பரினீத்தி சோப்ரா தானா இவ்வளவு சிக்கென்று இருப்பது என்று அவரது புகைப்படங்களை பார்த்து பாலிவுட் வியக்கிறது.

9 மாதங்கள்

என் உடலை நினைத்து பெருமையாக உள்ளது. நான் இப்படி ஆக 9 மாத காலம் ஆனது. நான் தற்போதும் ஒர்க்அவுட் செய்கிறேன். இனி இதை விட சிறப்பாக இருப்பேன் என்கிறார் பரினீத்தி.

பாராட்டு

அருமை திஷா. உன்னை நினைத்து பெருமையாக உள்ளது. அனைத்து புகைப்படங்களையும் அனுப்பு. இது என் தங்கையாக்கும் என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

வாவ்

இது சூப்பராக உள்ளது பரி, வாவ் என நடிகை அதிதி ராவ் ஹைதரியும், ஹாட்டி என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் பரினீத்தியை பாராட்டியுள்ளனர்.

English summary
Chubby girl Parineeti Chopra has become a hottie by losing lot of kilos in a span of 9 months.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil