»   »  ஹப்பா 50 லட்சம் பேரா... திணறும் பரிணிதி சோப்ராவின் டுவிட்டர் பேஜ்.. ரசிகர்களுக்கு "லைவ் டிரீட்"

ஹப்பா 50 லட்சம் பேரா... திணறும் பரிணிதி சோப்ராவின் டுவிட்டர் பேஜ்.. ரசிகர்களுக்கு "லைவ் டிரீட்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பரிணிதி சோப்ரா டுவிட்டரில் கிட்டதட்ட 5 மில்லியன் (50 லட்சம்) பாலோயர்களை எட்டியுள்ளாராம்.

இதனைக் கொண்டாடும் வகையில் டுவிட்டரில் இன்று ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார்.

இந்தியின் மற்றொரு முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் கசின் இந்த பரிணிதி சோப்ரா.

எகிறிய மவுசு:

2011 ல் "லேடீஸ் vs ரிக்கி பால்" படம் மூலம் அறிமுகமான இந்த அழகிக்கு எகிறி நிற்கிறது மவுசு.

பஞ்சாபி குடும்ப அழகி:

26 வயதாகும் இவர் அக்டோபர் 22, 1988 ல் ஹரியானாவில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். முதல் படத்திலேயே பிலிம் பேர் விருதை வென்று திரும்பி பார்க்க வைத்தார்.

மூன்று பட்டம் பெற்றவர்:

மூன்று பட்டம் பெற்றவர்:

லண்டனில் நிதிநிர்வாகம், தொழில், பொருளாதாரம் என மூன்று பட்டங்களை பெற்றவர்.

முந்தியடிக்கும் கம்பெனிகள்:

முந்தியடிக்கும் கம்பெனிகள்:

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரையே தற்போது தங்கள் பிராண்டுகளுக்கு தூதுவராக நியமிக்க விளம்பர கம்பெனிகள் முந்தியடிக்கின்றன.

5 மில்லியன் ரசிகர்கள்:

5 மில்லியன் ரசிகர்கள்:

அத்தகைய பேமஸ் கேர்ள் ஆகிய இவர் கிட்டதட்ட 5 மில்லியன் பாலோயர்களை டுவிட்டரில் தட்டிச் சென்றுள்ளார். அதனையடுத்து இன்று ரசிகப் பெருமக்களுடன் காலை 11.30 மணியளவில் நேரடியாக சாட் செய்த இந்த டிராமா குயின் கேர்ள் அவர்களுடைய ஃபன்னியான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளாராம்.

English summary
Today there was a treat waiting for Parineeti Chopra fans as the drama queen girl has got 5 million fans following her on twitter and to celebrate this she announced a live chat session on twitter at 11.30 am. She directly interacted with her fans answering their fun questions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil