»   »  உடல் உறுப்புகளைத் தானம் செய்தார் பார்வதி ஓமணக்குட்டன்

உடல் உறுப்புகளைத் தானம் செய்தார் பார்வதி ஓமணக்குட்டன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகையும் மாடல் அழகியுமான பார்வதி ஓமணக் குட்டன் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார்.

அஜீத்துடன் 'பில்லா-2' படத்தில் நடித்து தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் பார்வதி ஓமனக் குட்டன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2008-ல் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சமூக சேவை

சமூக சேவை

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் சமூக சேவையில் நாட்டம் வந்துவிடும். அப்படி ஒரு நாட்டம் பார்வதிக்கும் வந்துவிட்டது.

இதன் விளைவாக ஆதரவற்றோருக்கு உதவி வரும் பார்வதி, இப்போது தன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். இதற்கான உறுதி மொழி பத்திரத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

உறுப்பு தானம்

உறுப்பு தானம்

இதுகுறித்து பார்வதி ஓமனக்குட்டன் கூறுகையில், "உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் நிறைய பேர் பயன் அடைவார்கள்.

பக்கபலம்

பக்கபலம்

உடல் உறுப்பு தானம் பற்றி முடிவு எடுத்ததும், அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட என் தாய், தந்தை, சகோதரர் போன்றோரும் என்னுடன் வந்தார்கள். அவர்கள் எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

பிறந்த நாளில்

பிறந்த நாளில்

எனது பிற்நத நாளில்தான் இந்த முடிவை எடுத்தேன். பிறந்த நாளை பார்ட்டி, மது விருந்து சாப்பாடு என கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. உடல் உறுப்பு தானம் போன்று ஆக்கப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடலாம்," என்றார்.

English summary
Actress Parvathy Omanakuttan has donated her organs to public.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil