»   »  தமிழில் 'நோட்புக்' பார்வதி!

தமிழில் 'நோட்புக்' பார்வதி!

Subscribe to Oneindia Tamil
Parvathy
மலையாளத்தில் பிரபலமான நோட்புக் படத்தின் நாயகி பார்வதி, தமிழுக்கு ஷிப்ட் ஆகிறார். அவர் தமிழில் நடிக்கவுள்ள படமும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படத்தின் ரீமேக்தான்.

மலையாளத்தில் ஹிட் ஆன படம் சிந்தாமணி கொல கேஸ். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான இப்படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

மலையாள ஒரிஜினலில் சுரேஷ் கோபி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மருத்துவக் கல்லூரி மாணவி சிந்தாமணி கேரக்டரில் பாவனா நடித்திருந்தார்.

அதே ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் சிந்தமாணி கொல கேஸ் இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. சுரேஷ் கோபி கேரக்டரில் புதுமுக நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளாராம். முக்கிய கேரக்டரான மாணவி வேடத்தில் நோட்புக் படத்தின் நாயகி பார்வதி நடிக்கிறார்.

தமிழில் இதுதான் பார்வதிக்கு முதல் படம். தற்போது பார்வதி மோகன்லாலுடன் இணைந்து பிளாஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிபி மலையில் இயக்கி வருகிறார்.

தமிழுக்கு வருவது குறித்து பார்வதிக்கு பரம சந்தோஷமாம். எத்தனையோ மலையாள ஹீரோயினக்ளுக்கு வரவேற்பு கொடுத்த தமிழ்த் திரையுலகமும், தமிழ்ப் பெருங்குடிமக்களும், தனக்கும் அதே அளவிலான வரவேற்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு கோலிவுட்டுக் கிளம்பி வருகிறாராம்.

இப்படத்தின் கதை கோவையில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகளை மொரீஷியஸிலும் எடுக்கப்படவுள்ளதாம்.

இதுதவிர காமெடிப் புயல் வடிவேலு, மணிவண்ணன் ஆகியோரும் படத்தைப் பத்திரமாக கொண்டு செல்ல உதவப் போகிறார்கள். ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil