குளியல் வீடியோ வெளியிட்ட பார்வதி நாயர்...ஆயிரக்கணக்கில் குவியும் ஹார்ட்கள்
சென்னை : பிரபல மாடலும், நடிகையுமான பார்வதி நாயர், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிக்க வந்தார்.

தொடர்ந்து கமல் நடித்த உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா, ரூபம் படங்களில் நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான பார்வதி, தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவிலும் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று, ஷவரில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். கருப்பு நிற உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். பார்வதி வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு ஹார்ட்கள் குவிந்து வருகின்றன.
சிலர் பார்வதியை கலாய்த்தும் கமெண்ட் செய்துள்ளனர். என்ன ரித்திகா சிங் வாடகை அடித்து விட்டதா என கேட்டுள்ளனர். சமீபத்தில் ரித்திகா சிங்கும் இதே போன்று கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், குளக்கரையில் ஈரம் சொட்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











