»   »  கெட்டப்பை மாத்தி... மேக்கப்பை மாத்தி... ‘கமலவதாரம்’ எடுத்த நடிகை லட்சுமி பிரியா!

கெட்டப்பை மாத்தி... மேக்கப்பை மாத்தி... ‘கமலவதாரம்’ எடுத்த நடிகை லட்சுமி பிரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் தீவிர ரசிகையான நடிகை லட்சுமி பிரியா, அவரைப் போலவே கெட்டப் போட்டு வித்தியாசமாக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார்.

முன்தினம் பார்த்தேனே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. தொடர்ந்து கவுரவம், சுட்டகதை, கள்ளப்படம், யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மாயா, களம் ஆகிய படங்களில் லட்சுமி பிரியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் லட்சுமி பிரியா.

கமல் ரசிகை...

கமல் ரசிகை...

கமலின் தீவிர ரசிகையான லட்சுமி பிரியா, அவரின் பிரபலமான 12 வித கெட்டப்களைப் போட்டு தானும் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். அவற்றைத் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.

12 கெட்டப்புகள்...

12 கெட்டப்புகள்...

கமலின் 16 வயதினிலே படம் முதல் சமீபத்தில் வெளியான உத்தம வில்லன் படம் வரை கமலின் புகழ்பெற்ற 12 கெட்டப்புகளைப் போலவே தனக்கும் மேக்கப் போட்டு இந்த போட்டோஷூட்டை அவர் நடத்தியுள்ளார்.

போட்டோஷூட்...

போட்டோஷூட்...

லட்சுமி பிரியாவின் இந்த முயற்சிக்கு அவரது நான்கு தோழிகள் மிகவும் உதவியுள்ளனர். இவர்களில் ஒருவர் போட்டோகிராபராக உள்ளார், மற்றொரு தோழி காஸ்ட்யூன் டிசைனராகவும், மற்றொரு தோழி மேக்கப் மேனாகவும் உள்ளாராம்.

வித்தியாசமான முயற்சி...

வித்தியாசமான முயற்சி...

வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து, தோழிகளின் உதவியோடு இந்த வித்தியாசமான போட்டோஷூட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் லட்சுமி பிரியா.

அதே தோற்றம்...

அதே தோற்றம்...

இதற்காக முதலில் கமலின் புகழ்பெற்ற புகைப்படங்களை இந்தக் குழு சேகரித்துள்ளது. பின்னர் அதே போன்ற தோற்றத்தை தங்களது புகைப்படத்தில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாட் எ மேன்...

வாட் எ மேன்...

ஏற்கனவே கமலின் தீவிர ரசிகையான லட்சுமி பிரியாவிற்கு இந்தப் போட்டோஷூட்டிற்குப் பின் அவர் மீது மேலும் மதிப்பு கூடி விட்டதாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் கமல் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என பாராட்டுகிறார்.

நோ மீசை...

நோ மீசை...

ஆனால், சில படங்களில் கமல் போல் மீசை, தாடி இல்லாமல் தோன்றுகிறார் லட்சுமி பிரியா. காரணம், கமலின் அந்தக் கதாபாத்திரத்தின் பெண் பிரதியாக தோன்ற வேண்டும் என திட்டமிட்டு அவ்வாறு செய்துள்ளார்களாம்.

சேலை கட்டி...

சேலை கட்டி...

மாறாக போலி மீசையை ஒட்டிக் கொண்டு வந்து நடிக்க அவருக்கு விருப்பமில்லையாம். அதேபோல், ஹேராம் பட போட்டோ போல் எடுக்கையில் சேலை கட்டி போஸ் கொடுத்தாராம்.

பாராட்டு...

பாராட்டு...

தனது புகைப்படங்களுடன் கூடவே கமலின் புகைப்படத்தையும் சேர்த்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். லட்சுமிபிரியாவின் வித்தியாசமான இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
Lakshmi Priyaa Chandramouli of Sutta Kadhai fame has come up with an interesting photoshoot. The actress, an ardent fan of Kamal Haasan, has dressed up to look like some of Kamal’s well-known filmi characters, with her friends aiding her achieve that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil