»   »  "என் காலை வேணும்னா எடுத்துடவா..?" - ரசிகரின் கமென்டுக்கு நடிகையின் கேள்வி!

"என் காலை வேணும்னா எடுத்துடவா..?" - ரசிகரின் கமென்டுக்கு நடிகையின் கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பியாவின் கால்களை பற்றி கமெண்ட் போட்ட ரசிகர்..!!- வீடியோ

சென்னை : 'பொய் சொல்லப்போறோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து 'ஏகன்', 'கோவா', 'கோ', 'சட்டம் ஒரு இருட்டறை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்து பின்னர் நடிகை ஆனார். பியா பாஜ்பாய் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார் பியா.

Pia bajpai asks her fan on twitter

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் புதிய புகைப்படங்கள் தான் அவ்வப்போது ட்ரெண்ட். அதிலும் பாலிவுட் நாயகிகள் எல்லாம் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த- புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

சமீபத்தில் நடிகை பியா பாஜ்பாய் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொபைல் பிக்சராக பதிவேற்றி இருந்தார். அந்தப் புகைப்படத்தில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார் பியா. இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஒரு ரசிகர், "இந்தப் புகைப்படத்தில் கால் தான் உங்களது அழகைக் கெடுத்திருக்கிறது" என்கிற ரீதியில் கமென்ட் செய்ய, அதற்கு பியா, "அப்போ என் காலை எடுத்துடவா" என்று கேட்டுள்ளார்.

English summary
Actress Pia Bajpai is acting in Telugu, Malayalam and Hindi films. Recently actress Pia Bajpai has uploaded a photo on Twitter. This photo goes viral among fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X