»   »  ஆந்திராவில் கரையொதுங்கிய ப்ரியாமணி

ஆந்திராவில் கரையொதுங்கிய ப்ரியாமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார் ப்ரியாமணி.

ப்ரியாமணி பிறந்தது பாலக்காட்டில் தமிழ் பிராமண குடும்பத்தில். ஆனால் இவர் வளர்ந்தது பெங்களூரில். தமிழ்சரளமாக பேசத் தெரிந்த ப்ரியாமணி பெங்களூரில் மாடலிங் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார்.

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானார். வாம்மா மின்னலு என்பது போல படம் வந்ததும்தெரியவில்லை; போனதும் தெரியவில்லை. அட்டர் பிளாப்.

அதைப் பற்றிக் கவலைப்படாமல் பாலுமகேந்திரா, தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கும் அது ஒரு கனாக்காலம்படத்தில் ஒப்பந்தம் செய்தார். தனுஷ் கால்ஷீட் குளறுபடியில் சிக்க, அடுத்த மாதமே பாலு மகேந்திராவுக்கு ஹார்ட்அட்டாக் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

இப்போது தனுஷின் கால்ஷீட் இல்லாததால் படம் அம்போவென நிற்கிறது. மேலும் ப்ரியாமணி நடிக்கவிருந்தஉள்ளம், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் என்ன காரணத்தினாலோ பூஜை போடப்பட்டதோடு நிற்கின்றன.

அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், ப்ரியாமணி மற்ற மொழிகளில் வாய்ப்பு தேடும் நிலைக்குதள்ளப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் டேரா அடுத்து வாய்ப்பு தேடியதில் காசி பட இயக்குநர் வினயனின் படத்தில் நடிக்க வாய்ப்புகிடைத்தது. சத்யம் என்ற அந்த படத்தில் ப்ரியாமணிக்கு, ஜோடியாக மறைந்த மலையாள நடிகர் சுகுமாறன்நாயரின் மகன் பிருதிவிராஜ் நடித்தார்.

வினயன் நிறைய ஹிட் படம் கொடுத்தவர் என்பதால், சத்யம் படத்தை பெரிதும் நம்பினார் ப்ரியாமணி. படம்ஹிட்டாகி, கால்ஷீட் டைரி பொங்கி வழியும் அளவுக்கு மலையாளத்தில் வாய்ப்பு வரும் என்று நினைத்தார்.ஆனால் எதிர்பாராதவிதமாக படம் பிளாப் ஆகிவிட்டது.

அதனால் மலையாளத்தில் அடுத்து வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. ஜாகையை மறுபடியும் சென்னைக்குமாற்றினார். கோ-ஆர்டினேட்டர்கள் உதவியுடன் தமிழ் படங்களில் வாய்ப்பு தேடினார். படங்கள் பிளாப் ஆனது,பாலுமகேந்திராவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது, இரண்டு படங்கள் பாதியில் நிற்பது இதற்கெல்லாம் ப்ரியாமணிகாரணமில்லை என்றாலும், கோடம்பாக்கத்து ஆட்கள் அதை நம்ப வேண்டுமே !.

ஒரு வாய் காப்பி குடிப்பதற்கே வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்களாயிற்றே. விளைவு, சென்னை வந்தப்ரியாமணியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

தமிழ், மலையாளம் இரண்டும் பார்த்தாயிற்று. அடுத்து தெலுங்கில் கால் வைத்துப் பார்ப்போம் என்ற முடிவுக்குவந்த ப்ரியாமணி ஹைதராபாத் பக்கம் போய் கடையை விரித்திருக்கிறார். அதிர்ஷ்டம் பாருங்கள். இரண்டுபடங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை, நாயகன் யார் என்பதும் முடிவாகவில்லை. அதற்குள்ப்ரியாமணி எப்படி ஒப்பந்தமானார் என்று கேட்கிறீர்களா?

அது ப்ரியாமணிக்கே வெளிச்சம் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil