Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தயவு செய்து அதை கேட்காதீங்க..எரிச்சலா இருக்கு.. கடுப்பான நடிகை அபர்ணா பாலமுரளி!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் நாயகியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி.
அபர்ணா பாலமுரளி, மகேசிண் பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார்.
கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே?
அதைத்தொடர்ந்து, சண்டே ஹாலிடே என்ற படத்தில் அனு என்ற கதாபாத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அபர்ணா பாலமுரளி ஒரு நடிகை மட்டுமில்லாமல் ஒரு பாடகியும் ஆவார்.

அபர்ணா பாலமுரளி
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி, தமிழில் 8 தோட்டக்கள், சர்வம் தளயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்கள் திரையரங்கில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது.

தளுக்கு மொழுக்கு
சூரரைப்போற்று படத்திலேயே கொஞ்சம் தளுக்கு மொழுக்கு இருந்த அபர்ணா, தற்போது அல்ட்ரா மாடல் அழகியாக மாறியுள்ளார். கேப்டன் ஜிஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான சூரைப்போற்றுப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து அசத்தி இருப்பார் அபர்ணா பாலமுரளி.

வீட்ல விசேஷம்
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள் நிலையில், 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஷிவானி நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உருவகேலி செய்கிறார்கள்
அண்மையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அபர்ணா, தற்போது உடல் எடை அதிகரித்து இருப்பதால், சமூகவலைத்தளங்களில் என்னை உருவகேலி செய்து வருகிறார்கள். முகத்தை மறைத்துக்கொண்டு, எங்கோ இருந்து கொண்டு ஒருவரை எவ்வளவு வேண்டுமானாலும் கேலி செய்ய முடியும். ஒருவரை விமர்சிக்கும் முன் அவரைபற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.

எரிச்சலா இருக்கு
மேலும், பெரும்பாலும் பேட்டிகளில் நடிகைகளிடம் அவர்களது நடிப்பை பற்றியோ, நடிகையின் கதாபாத்திரம் பற்றி கேள்வி கேட்காமல், எப்போது கவர்ச்சியாக நடிக்க போகிறீர்கள், எந்த நடிகர்களுடன் நடிக்க உங்களுக்கு ஆசை, எப்போது திருமணம், திருமணம் செய்து கொள்ளும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என கேள்வி கேட்கிறார்கள் இந்த கேள்விகளை எல்லாம் கேட்கும் போது எரிச்சலா இருக்கு தயவு செய்து அந்த கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என்று நடிகை அபர்ணா பாலமுரளி.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
குலதெய்வத்தை வேண்டி உன் காதை அறுத்தாலும் அது நடக்காது... நெட்டிசனுக்கு சவால் விட்ட மோகன் ஜி
-
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!