»   »  அதெப்படி ஆந்திரா போகலாம்... சந்திரபாபு நாயுடுகிட்ட சிடி வாங்கலாம்?- த்ரிஷாவுக்கு கண்டனம்

அதெப்படி ஆந்திரா போகலாம்... சந்திரபாபு நாயுடுகிட்ட சிடி வாங்கலாம்?- த்ரிஷாவுக்கு கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி ஆந்திரா பக்கம் செல்லும் தமிழ்நாட்டுப் பிரபலங்களுக்கு கொஞ்சம் சிக்கல்தான். இதில் முதலில் சிக்கலுக்குள்ளாகியிருப்பவர் நடிகை த்ரிஷா.

தான் தெலுங்கில் நடித்த ஒரு பட விழாவில் பங்கேற்கச் சென்ற த்ரிஷாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சி கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

Political outfir strongly condemned Trisha

பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கில் த்ரிஷா நடித்துள்ள படம் லயன். இந்தப் படம் வருகிற 25-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் 20- தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

இந்த விழாவில்தான் த்ரிஷாவும் பங்கேற்றார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொண்டதற்கு இந்து மக்கள் கட்சி (இந்தக் கட்சி எங்கதாம்ப்பா இருக்கு?) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்ட அறிக்கை:

20 தமிழர்களை ஆந்திர போலீசார் குரூரமாக கொன்று குவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொலையுண்ட தமிழர்களின் ரத்த கறை காயும் முன்பே சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பட விழாவில் த்ரிஷா கலந்து கொண்டு அவருடன் சிரித்து பேசியது தமிழர்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.

இந்த விழாவை த்ரிஷா புறக்கணித்து இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நடிகைகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாய் காரில் அடிபட்டு காயம்பட்டு கிடந்ததற்கே கவலைப்பட்டு துடித்து போனவர் த்ரிஷா. அப்படிப்பட்டவர் 20 தமிழர்களை கொன்றவர்களுடன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
A Hindu political outfit has strongly condemned Trisha for attending Telugu film Lion audio launch at Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil