அடுத்தடுத்து பெரிய படங்கள்.. சத்தமில்லாமல் சாதிக்கும் ’பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி!
சென்னை: விஷாலின் ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
தனுஷின் ஜகமே தந்திரம், சாய் பல்லவியின் கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட படங்கள் ஐஸ்வர்யா லட்சுமியின் கைவசம் உள்ளன.

மருத்துவர் டு நடிகை
நிவின் பாலி நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான Njandukalude Nattil Oridavela படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி. சாய் பல்லவி, அதிதி ஷங்கர் போல இவரும் மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ முத்தம் போல சினிமாவில் ஏகப்பட்ட டாக்டர் நடிகைகல் வலம் வருகின்றனர். மலையாள படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் 2019ல் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

தனுஷுக்கு ஜோடி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் இலங்கைப் பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவாக இடம் பிடித்தார். சமீபத்தில் வெளியான சாய் பல்லவியின் கார்கி படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பூங்குழலி
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி படு பிஸியாக சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என இரு பெரும் நடிகைகள் நடித்துள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் படகோட்டி பெண் பூங்குழலியாகவும் பொன்னியின் செல்வனின் காதலியாகவும் சைலன்ட்டாக ஸ்கோர் செய்யப் போகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

ஆர்யாவின் கேப்டன்
விஷால், தனுஷ், ஜெயம் ரவியை தொடர்ந்து ஆர்யாவின் கேப்டன் படத்திலும் இவர் தான் ஹீரோயின். இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஏலியன் படமாக உருவாகி உள்ள கேப்டன் படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகை சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மம்முட்டிக்கு ஜோடி
70 வயதாகும் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக கிறிஸ்டோபர் எனும் மலையாள படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்டா குஷி, அம்மு என இரு தெலுங்கு படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிப்பில் இவர் காட்டும் பர்ஃபெக்ஷன் தான் இத்தனை படங்களில் இவர் புக் ஆக காரணம் என்கின்றனர் சினிமா உலகினர்.


Click it and Unblock the Notifications











