»   »  நீச்சல் உடை-பில்லாவுக்கு பூஜா நோ

நீச்சல் உடை-பில்லாவுக்கு பூஜா நோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பில்லா படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பூஜா வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.

அஜீத், நயனதாரா, நமீதா நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், பாலாஜி தயாரிப்பில் பில்லா படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. தற்போது மலேசியாவில் முகாமிட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளனர். அஜீத், நமீதா சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் விஷ்ணுவர்த்தன்.

இந்த நிலையில், பில்லாவில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் பூஜாவைத்தான் அணுகியுள்ளார் விஷ்ணுவர்த்தன். அவர் ஏற்கனவே இயக்கிய பட்டியல் படத்தில் பூஜாவும் ஒரு நாயகி என்பது நினைவிருக்கலாம். ஆனால் பில்லா வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் பூஜா.

ஜீவாவுடன் நடித்த பொறி படத்திற்குப் பிறகு பூஜாவை சென்னை பக்கமே காண முடியவில்லை. என்ன ஏது என்று விசாரித்தபோது, அவர் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க சொந்த நாடான இலங்கைக்குச் சென்றிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் அவர் விடுமுறைக்காக செல்லவில்லை, மாறாக, சில சிங்களப் படங்களில் நடிக்கவே அங்கு சென்றிருந்தார் எனத் தெரிய வந்தது. 2 நாட்களுக்கு முன்பு தனது சிங்களப் பட வேலைகளை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பினார் பூஜா.

வந்ததும், தனக்கு நெருக்கமான சில பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அவர்களிடம் பில்லா படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

பில்லா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என விஷ்ணுவர்த்தன் என்னை அணுகினார். எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் சில காட்சிகளில் நீச்சல் உடையில் வர வேண்டும் என விஷ்ணுவர்த்தன் கூறியதை என்னால் ஏற்க முடியவில்லை. நீச்சல் உடையில் நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினேன்.

ஆனால் கண்டிப்பாக அந்தக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றார் விஷ்ணுவர்த்தன். அப்படியானால் அந்த வாய்ப்பே எனக்கு வேண்டாம் என கூறி நடிக்க மறுத்து விட்டேன்.

நீச்சல் காட்சியில் நடிக்க பிடிக்காமல்தான் பில்லா வாய்ப்பை நிராகரித்தேன். மற்றபடி எனக்கும், விஷ்ணுவர்த்தனுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. பட்டியல் மூலம் எனக்கு பிரேக் கொடுத்தவர் விஷ்ணுவர்த்தன். எனக்கும், அவருக்கும் இன்னும் நல்ல நட்பு உள்ளது என்றார் பூஜா.

பூஜாவுக்கு இப்போது தமிழில் ஒரு படம்தான் உள்ளாம். சிங்களத்தில் எத்தனை உள்ளதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil