»   »  கன்னடத்தில் செட்டிலாகும் சஞ்சனா

கன்னடத்தில் செட்டிலாகும் சஞ்சனா

Subscribe to Oneindia Tamil

தமிழுக்கு வந்து மார்க்கெட் தேறாமல் தள்ளாடி வந்த பூஜா காந்தி இப்போது கன்னடத்தில் செட்டிலாகிறார்.

கொக்கி மூலம் தமிழுக்கு வந்தவர் சஞ்சனா என்ற பூஜா காந்தி (ஒரிஜினல் பெயர்). அதில் கிளாமரில் தரிசனம் தந்தும், படம் நன்றாக ஓடியும் பூஜாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

பகடை மற்றும் தாலாட்டு ஆகிய இரு படங்களில் மட்டுமே புக் ஆனார். அதிலும் பகடை படத்திலிருந்து பூஜாவைத் தூக்கி விட்டனராம்.

இந் நிலையில் தனது சொந்த மொழியானகன்னடத்திற்குப் போன பூஜா அங்கு மூங்காரு மலே என்ற படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட். கன்னட சினிமா வரலாற்றிலேயே மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் இது. ரூ. 50 கோடி லாபம் ஈட்டியுள்ளது (நேற்று தயாரிப்பாளரின் வீட்டில் வருமான வரி ரெய்டும் நடந்துவிட்டது வேறு கதை)

இந்தப் படத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாக்காரர்களின் பார்வை பூஜா மீது விழுந்துள்ளது.

மூங்காரு மலே படத்தின் வெற்றி சந்தோஷம் தருகிறது. என் நடிப்பை எல்லோரும் பாராட்டுவதை கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இனிமேல் மற்ற மொழி படங்களை விட கன்னடத்தில் அதிக கவனம் செலுத்த போகிறேன் என்கிறார் பூஜா காந்தி.

பூஜா காந்தி கையில் இப்போது கன்னடத்தில், கிருஷ்ணா, நீ டாடா நான் பிர்லா, மன்மதா, ஹனி ஹனி ஆகிய படங்கள் உள்ளதாம்.

இம்புட்டு இருக்கே, அப்புறம் என்ன?!

Please Wait while comments are loading...