»   »  பூஜா கால் போச்சு!

பூஜா கால் போச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீரோ காலில் விழுந்து நடிகை பூஜாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இலங்கையிலிருந்து பெங்களூர் வழியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பூஜா. பல படங்களில் நடித்துள்ள பூஜா, சமீப காலமாக தமிழில் அதிகம் காணவில்லை.

இலங்கைக்கும், பெங்களூருக்குமாக அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார். சிங்களப் படங்களில் பிசியாகி விட்டதால் சென்னை பக்கம் பூஜாவை அதிகம் பார்க்க முடியவில்லை.

இந் நிலையில் கொழும்பு செல்வதற்காக தனது பெங்களூர் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தார் பூஜா. அப்போது தனது அறையிலிருந்து ஒரு பீரோவை இன்னொரு அறைக்கு நகர்த்தினாராம்.

அப்போது திடீரென நிலை தடுமாறி பீரோ அவரது காலில் விழுந்து விட்டது.

வலியால் அலறித் துடித்த பூஜாவை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவிக்குப் பின் எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.

அதில், அவரது கால் எலும்பு முறிந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும், வீட்டில் 20 நாட்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil