»   »  பூஜா 'பிச்சை' - பாலா ஓ.கே.!

பூஜா 'பிச்சை' - பாலா ஓ.கே.!

Subscribe to Oneindia Tamil


நான் கடவுள் படத்தின் அடுத்த நாயகியாக பூஜாவை புக் செய்துள்ளார் பாலா. பூஜாவின் நடிப்பில் திருப்தியான அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார்.


பாலாவின் இயக்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது நான் கடவுள். இப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அஜீத் மாற்றப்பட்டு ஆர்யா சேர்க்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹீரோயின் விஷயத்தில்தான் பாலாவுக்கு இன்னும் திருப்தி வரவில்லை. இதனால் அடுத்தடுத்து ஹீரோயினை மாற்றிக் கொண்டே இருந்தார். முதலில் நடித்த பாவனா பின்னர் கைவிடப்பட்டார். பிறகு மலையாளத்து பார்வதியை முயற்சித்தார். அதுவும் சரிவரவில்லை.

இதைத் தொடர்ந்து கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சியைக் கூப்பிட்டுப் பார்த்தார். அவரும் திருப்தியாக இல்லை என்பதால் தூத்துக்குடி நாயகி கார்த்திகாவை அழைத்து நடிக்க வைத்தார். அவரும் பெரியகுளம் தெருக்களில் உயிரைக் கொடுத்து பிச்சை எடுத்து நடித்துக் காட்டினார்.

கார்த்திகாவின் நடிப்பிலும் பாலாவுக்குத் திருப்தி வரவில்லை. இதையடுத்து கார்த்திகாவையும் கழற்றி விட்டு விட்டார் பாலா.

பின்னர் வந்தார் பாலிவுட் நீத்து சந்திரா. அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே ரிஜக்ட் செய்து விட்டார் பாலா. இந்த நிலையில்தான் தற்போது பாலாவின் நாயகியாக மாறியுள்ளார் சிங்களத்து பூஜா.

நீத்துவை நிராகரித்த கையோடு டெஸ்ட் ஷூட்டுக்கு வருமாறு பூஜாவை அழைத்திருந்தார் பாலா என்று நாம்தான் முதன் முதலாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது பூஜாவின் நடிப்பில் பாலாவுக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதால் அவரையே நாயகியாக்கி விட்டாராம்.

பூஜா தற்போது பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று காலை முதல் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறாராம். கண் பார்வையற்ற பிச்சைக்காரப் பெண் வேடத்தில் பூஜா நடிக்கிறார்.

தான் எதிர்பார்த்தது போல பூஜா இருப்பதாக பாலாவுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். அதை விட பூஜாவுக்கும், ஆர்யாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்பதும் பூஜாவை ஓ.கே. செய்ய பாலாவுக்கு தோதாத இருந்ததாம்.

ஆர்யாவும், பூஜாவும் இணைந்து நடிப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்பு உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம்போ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பூஜா மீது பாலாவுக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதால் படம் இனி வேகம் பிடிக்கும் என்று தெரிகிறது. மேலும் அக்டோபருக்குள் படத்தை முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்து விடலாம் எனவும் பாலா நம்பிக்கையுடன் உள்ளாராம்.

Read more about: baala, pooja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil