மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இணைகிறார் கன்னட நடிகை பூஜா காந்தி?
மகர சங்கராந்திக்குப் பிறகு அவர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இணையவுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை பூஜா காந்தி மதச்சார்பற்ற ஜனதாதள அலு்வலகத்திற்கு வந்திருந்தார். இதன் மூலம் அவர் கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.
கட்சிஅலுவலகத்தில் நடந்த சுவாமி விவேகானந்தாவின் 150வது பிறந்த நாள் விழாவில் பூஜாகாந்தி கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில மகளிர் அணித் தலைவியான ஜோதி ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பூஜாகாந்தி வந்திருந்தார். இருப்பினும் அவர் கட்சியில் இணையப் போவது உறுதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய விழாவின்போது கட்சித் தலைவர்களிடம் பூஜா காந்தியை, ஜோதி ரெட்டி அறிமுகம் செய்து வைத்தாராம். மேலும் பூஜா காந்தியின் வரவால் விழாவுக்கும் கவர்ச்சி கோட்டிங் கிடைத்ததாம்.
நேற்றைய விழாவில் பேசிய பூஜாகாந்தி, முன்னாள் முதல்வரும், கட்சித் தலைவருமான குமாரசாமியை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். பெண்களுக்கும், ஏழைகளுக்கும் உதவும் வள்ளல் என்று அவரைப் புகழ்ந்தார் பூஜா காந்தி.
பூஜா காந்தியின் வரவு குறித்து ஜோதி ரெட்டிகூறுகையில், சில தினங்களுக்கு முன்பு பூஜாகாந்தி செயல்பட்டு வரும் எச்ஐவிக்கு எதிரான என்ஜிஓ அமைப்பின் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன்.அப்போது பூஜா காந்தியின் இந்த சேவையைப் பாராட்டினேன். மேலும் கட்சியில் வந்து இணையுமாறும் கோரிக்கை விடுத்தேன். அதுகுறித்து யோசிப்பதாக பூஜா தெரிவித்தார் என்றார்.
தற்போதைய நிலவரப்படி மகர சங்கராந்தி முடிவடைந்த பின்னர் கட்சியில் பூஜா காந்தி இணைவார் என்று கூறுகிறார்கள்.
இதுகுறித்து பூஜா காந்தி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்ததாக பெரும் சர்ச்சைக்குள்ளானவர் பூஜா காந்தி என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications












