»   »  பூஜா காந்தி கன்னடத்தில் பிசி

பூஜா காந்தி கன்னடத்தில் பிசி

Subscribe to Oneindia Tamil
Pooja Gandhi
தமிழில் அறிமுகமாகிய பூஜா காந்தி இப்போது கன்னடத்தில் பிசியான நடிகையாகி விட்டார்.

இந்திய அளவில் சினிமாவில் கலக்க தமிழ் ஒரு மீடியமாகி விட்டது. தமிழ் மீடியத்தில் படிக்கத்தான் பலரும் தயங்குகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நடிக்க பலரும் விரும்புகிறார்கள். காரணம், இங்கு ஒரு படம் ஹிட் ஆகி விட்டால் கூட போதும், அடுத்தடுத்து பல மொழிகளிலும் கலக்க நல்ல அட்ரஸ் கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் தமிழில் அறிமுகமாகிய பூஜா காந்தி இப்போது கன்னடத்தில் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

பி.வாசுவின் மகன் ஷக்தி நடித்து அறிமுகமான தொட்டால் பூ மலரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா காந்தி. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் மலரவில்லை. ஆனால் கன்னடம் பூஜாவைத் தேடி வந்தது.

கன்னடத்தில் அவர் நடித்த முங்காரு மலே படம் பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து அங்கு பூஜா பிசியான நடிகையாகி விட்டார்.

தமிழில் ஒரு ரவுண்டு அடித்து ஓய்ந்த ரமேஷ் அரவிந்த் இயக்கி, நடிக்கும் ஆக்சிடென்ட் என்ற படத்தில் பூஜா காந்திதான் நாயகி. இப்படம் ஒரு திரில்லர் படமாம். இப்படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார் ரமேஷ் அரவிந்த். அவரது மனைவியாக பூஜா காந்தி நடிக்கிறார்.

கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா காந்தி, திரில்லர் படத்தில் நடிக்கப் போவது வித்தியாசமான அனுபவம் என்று கூறுகிறார். அதேசமயம் இப்படத்திலும் பூஜாவுக்கு கிளாமர் சாயம் கொஞ்சம் இருக்குமாம்.

தமிழுக்கு மறுபடியும் எப்ப வருவீங்க என்ற கேள்விக்கு, நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் தமிழிலும் நடிப்பேன் என்கிறார் தனது மயக்கும் புன்னகையுடன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil