»   »  ட்ரீம் கார் வாங்கிட்டேன் - பூஜா ஹெக்டே ஹேப்பி அண்ணாச்சி!

ட்ரீம் கார் வாங்கிட்டேன் - பூஜா ஹெக்டே ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்த 'முகமூடி' படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அந்தப் படம் சரியாகப் போகாததால் தமிழில் படம் கிடைக்காமல் தெலுங்குப் பக்கம் சென்றார்.

பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் 'வேட்டகாடு', ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் 'ரேஸ்-3', தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே.

Pooja hegde bought her dream car

சினிமாவில் 2012-லேயே நடிகையாகி விட்டபோதும், இப்போதுதான் பூஜாவின் சம்பளம் அதிகரித்துள்ளதாம். அதனால் சினிமாவில் தான் நடித்து சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஒரு BMW கார் வாங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே.

அந்த காரின் மேல் தான் அமர்ந்துள்ள ஒரு போட்டோவையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. ஒரு கனவு கார் வாங்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா...

எனது உடலில் ரத்தம், எலும்புகள், செல்கள் எல்லாம் கொஞ்சம்தான் இருக்கின்றன. நன்றியுணர்வு தான் பெரிய மூட்டையாக நிரம்பியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
'Mugamoodi' is the debut film of Actress Pooja Hegde . Now, Pooja Hegde shares happiness with his dream BMW car bought.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil