பூஜா ஹெக்டே காட்டில் சரியான மழைதான்.. 5 நிமிட பாடலுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. ஆத்தாடி
சென்னை: பூஜா ஹெக்டே இப்போது கோலிவுட்டின் பிஸியான நடிகைகளில் ஒருவர். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய அவர் அடுத்ததாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். சமீபத்தில் அதுதொடர்பான போஸ்டர் வெளியானது. இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் தனது கரியரை கோலிவுட்டில் தொடங்கியவர் பூஜா ஹெக்டே. ஜீவா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக பூஜாவுக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. கோலிவுட் கதவுகளும் சாத்தப்பட்டன. உடனே தனது ரூட்டை மாற்றிய அவர் டோலிவுட், பாலிவுட்டில் கவனத்தை திருப்ப ஆரம்பித்தார். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்தது.
பயங்கர பிஸி: தெலுங்கிலும், ஹிந்தியிலும் பூஜாவுக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கிளாமர், ஹோம்லி என எந்த ரோல் கிடைத்தாலும் அமர்க்களப்படுத்தினார். அல்லு அர்ஜுனாவுடன் சேர்ந்து அவர் புட்ட பொம்மா பாடலுக்கு போட்ட நடனத்துக்கு ஒட்ட்மொத்த தென் மாநிலங்களுமே ஆடின என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா. இப்படமும் தோல்விதான்.

பூஜா இங்கே டாப்: பீஸ்ட் படம் ஃப்ளாப் ஆனாலும் அம்மணிக்கு தொடர்ந்து கோலிவுட் கதவுகள் திறந்தன. அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற கன்னிமா பாடலுக்கு அவருடன் நடனமாடி ஒட்டுமொத்த தமிழ்நாடும் வைப் செய்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.
ஜனநாயகனில் பூஜா: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும் ஹீரோயினாக கமிட்டானார். இந்தப் படத்தில் அவர் கயல் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவர் தொடர்பான போஸ்டர் சமீபத்திதான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தமிழில் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும் வாய்ப்புகள் மட்டும் பூஜாவுக்கு குறையாமல் வருவதை பார்த்து மற்ற நடிகைகளும், ரசிகர்களூம் ஆச்சரியம்தான் படுகிறார்கள்.
ஐந்து கோடி சம்பளம்?: இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. படத்தின் வேலைகள் மும்முரமாக தொடங்கியிருக்கின்றன. இதில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட பூஜாவை அணுகியதாகவும், அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்; கேட்ட தொகையை கொடுக்க படக்குழு ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











